'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!

|

அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் இரகசியங்களை எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்வர்ட் ஸ்னோடென்

எட்வர்ட் ஸ்னோடென்

எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் அமெரிக்காவின் சிறப்பு உளவுத்துறை பிரிவான சி.ஐ.ஏவில் பணியாற்றி வந்துள்ளார். சி.ஐ.ஏவில் இவர் பணியாற்றிய காலகட்டத்தில், அங்குள்ள இரகசிய கோப்புகளை யாருக்கும் தெரியாமல் படித்து, அமெரிக்கா பற்றிய பல உண்மைகளை அவர் தெரிந்துகொண்டதாக எட்வர்ட் ஸ்னோடென் கூறியுள்ளார்.

ஏரியா 51 பற்றிய தகவல்

ஏரியா 51 பற்றிய தகவல்

அமெரிக்கா நாடு எப்படி தனது நட்பு நாடுகளில் அவர்களுக்கே தெரியாமல் உளவு வேலை பார்த்துவந்தது என்றும், ஏரியா 51 பற்றிய தகவல்கள், ஏலியன்கள் பற்றிய தகவல்கள் மற்றும் நிலவில் மனிதர்கள் முதலில் கால் பதித்தது உண்மைதானா? என்பது போன்ற பல உண்மைகளுக்குப் பின்னால் உள்ள விடைக்குப் பதிலை அவர் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

நான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.!நான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.!

தடைசெய்யப்பட்ட பகுதி

தடைசெய்யப்பட்ட பகுதி

உலகத்தின் மிக இரகசியமான இடங்களில் ஒன்றான அமெரிக்காவின் நிவேடா பகுதியில் உள்ள ஏரியா 51 கருதப்படுகிறது. இங்கு இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. தடைசெய்யப்பட்ட இந்த பகுதிக்குள் யாருக்கும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைத்து வைக்கப்பட்ட தகவல்

மறைத்து வைக்கப்பட்ட தகவல்

இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுத்திவது, இங்கு ஏலியன்கள் பற்றிய தகவல்களை அமெரிக்கா யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளது என்பது தான். இதனால் தான் இந்த பகுதி மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.

ஏரியா 51 பின்னால் உள்ள உண்மை

ஏரியா 51 பின்னால் உள்ள உண்மை

ஏரியா 51 பின்னால் உள்ள உண்மையை தற்பொழுது எட்வர்ட் ஸ்னோடென் போட்டுடைத்துள்ளார். இவர் தேடிய அமெரிக்காவின் இரகசிய கோப்புகளில் ஏலியன்கள் இருப்பதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்றும், இதற்கு முன்பும் ஏலியன்கள் பூமியுடன் தொடர்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

நாடகம் இல்லை உண்மை தான்

நாடகம் இல்லை உண்மை தான்

அதேபோல் நிலவின் மனிதர்கள் கால் பதித்தது பொய்யென்றும், அது ஒரு நாடகம் என்றும் கூறிவந்தவர்களுக்கும் எட்வர்ட் ஸ்னோடென் பதிலளித்துள்ளார். நிலவில் மனிதர்கள் கால் பதித்தது உண்மைதான் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உண்மைகளைப் போட்டுடைத்ததனால் அமெரிக்கா இவரைக் கைது செய்யத் தேடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Edward Snowden,Tells The Truth About Area 51 Aliens and Humans On The Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X