பாக். எதிராக பிரிட்டன் பார்த்த வேலை : அம்பலப்படுத்திய ஸ்னோடன்..!

|

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் (National Security Agency - NSA) ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த ஜூன் 2013-ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவில் வாழ்ந்து வரும் எட்வார்ட் ஸ்னோடன், சமீபத்தில் ஏலியன்கள் பூமிக்கு 'மெசேஜ்கள்' அனுப்பி இருக்கலாம், அவைகளை நம்மால் புரிந்து கொள்ளத்தான் முடிவதில்லை என்று சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.

பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியர்கள்..!

அதை தொடர்ந்து தற்போது, பாகிஸ்தானை மிகவும் 'தெளிவாக' உளவு பார்த்த பிரிட்டன் பற்றிய பரபரப்பு தகவல்களை பிபிசி-க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தியுள்ளார் எட்வார்ட் ஸ்னோடன்..!

அம்பலம் :

அம்பலம் :

பிரிட்டன், பாகிஸ்தான் நாட்டின் ரவுட்டர்களை 'ஹேக்' செய்து பல வகையான கம்யூனிக்கேஷன் டேட்டாக்களை சேகரித்து வந்ததை பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தியுள்ளார் ஸ்னோடன்.

தீவிரவாதம் :

தீவிரவாதம் :

பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க 'ஹேக்' செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட தகவல்களை, பிரிட்டன் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரவுட்டர்கள்  :

ரவுட்டர்கள் :

மேலும் 'ஹேக்' செய்யப்பட்ட பாகிஸ்தானின் ரவுட்டர்கள் எல்லாமே அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவைகள் என்பதையும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

அமெரிக்க தயாரிப்பு :

அமெரிக்க தயாரிப்பு :

அந்த ரவுட்டர்கள் எல்லாம் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco systems) தயாரித்தவைகள் என்றும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

உறுதுணை :

உறுதுணை :

மேலும் பிரிட்டன் நிகழ்த்திய இந்த 'ஹேக்' உளவானது, முழுக்க முழுக்க பிரிட்டன் அரசாங்கத்தின் உறுதுணையுடன் நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்கு :

பங்கு :

முக்கியமாக இந்த 'ஹேக்' உளவில் பிரிட்டன் அரசாங்கத்தின் தொடர்புத்துறை தலைமையகம் (Government Communications Headquarters - GCHQ) பெரும் பங்கு வகித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

தெரியாமல் :

தெரியாமல் :

போன் உரிமையாளர்களுக்கே தெரியாமல் அவர்களின் போன்களை உளவு பார்க்க, பிரிட்டன் தொடர்புத்துறை தலைமையகத்தால் முடியும் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் கூறியுள்ளார்.

உளவு :

உளவு :

உளவு பார்க்க விருப்பப்படும் போன்களுக்கு மறைகுறியாக்கப்பட்ட டெக்ஸ்ட் மெசேஜ்களை (encrypted text message) அனுப்பி வைக்குமாம் பிரிட்டன் அரசாங்கத்தின் தொடர்புத்துறை தலைமையகம்.

டெக்ஸ்ட் மெசேஜ்கள் :

டெக்ஸ்ட் மெசேஜ்கள் :

அந்த மறைகுறியாக்கப்பட்ட டெக்ஸ்ட் மெசேஜ்கள் உரிமையாளர்களுக்கே தெரியாமல் ஆடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அனுப்புமாம்.

தேவை :

தேவை :

"பிரிட்டனுக்கு நீங்கள் தேவை இல்லை, உங்கள் போன்கள் மட்டுமே போதும்" என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் எட்வார்ட் ஸ்னோடன்.

கூட்டு :

கூட்டு :

இந்த உளவில் ஸ்மார்ட்போன்களை 'ஹேக்'செய்ய பிரிட்டன் உடன் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமும் (NSA) சேர்ந்தே செயல்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அனுமதி இன்றி :

அனுமதி இன்றி :

ஸ்மார்ட்போன் உரிமையாளர்களின் அனுமதி இன்றி அவர்கள் போனில் உள்ள மைக்ரோபோனை (Microphone) 'ஆன்' செய்யும் 'ஹாட் மைக் டூல்' (Hot Mic Toll) இதில் பயன்படுத்தபட்டதாகவும்ஸ்னோடன் கூறியுள்ளார்.

முழுமை :

முழுமை :

அப்படியாக யாருக்கு நீங்கள் போன் செய்கிறீர்கள், என்ன பேசுகிறீர்கள், என்ன டெக்ஸ்ட் செய்கிறீர்கள், இன்டர்நெட்டில் என்ன தேடுகிறீர்கள், உங்கள் காண்டாக்ட் லிஸ்ட் என அத்தனையையும் ஹேக் செய்தது பிரிட்டன் என்றும் குற்றம் சுமற்றியுள்ளார்.

மறுப்பு :

மறுப்பு :

எட்வார்ட் ஸ்னோடனின் அனைத்து வகையான தகவல்களையும், குற்றச்சாட்டுகளையும் முழுமையாக பிரிட்டன் மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ரவுட்டர்களை 'ஹேக்' செய்து, பிரிட்டன் உளவு பார்த்து வந்த தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளார் ஸ்னோடன். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X