பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!

  |

  எட்வர்ட் ஸ்னோடன் - அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையினதும் (National Security Agency - NSA) முன்னாள் ஒப்பந்த நுட்பவியலாளர் ஆவார். 2013-ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய பாதுகாப்பு தகவல்களின் பல ரகசியமான ஆவணங்களையெல்லாம் நகல் எடுத்துகொண்டார், நகல் எடுக்கப்பெற்ற ஆவணங்களில் பல வகையான உலக கண்காணிப்பு திட்டங்கள் பற்றிய தகவல்கள் உள்ளடங்கியிருந்தது என்பதும் குறிபிடத்தக்கது.

  அடிப்படை குடியுரிமைகளை, குறிப்பாக அந்தரங்க உரிமைகளை மதிக்காமல், அரசுகள் அத்துமீறி பல வகையான ரகசிய கண்காணிப்பின் கீழ் பல திட்டங்களை முன்னெடுப்பதால் பொதுநலன் கருதி, தான் நகல் எடுத்த தகவல்களையெல்லாம் வெளியிடத் தொடங்கினார் எட்வர்ட் ஸ்னோடன். அன்று முதல் இன்று வரையிலாக அமெரிக்க அரசு இவரை வேவுக்குற்றம் சாட்டி கைது செய்ய துடிக்க மறுபக்கம் ஸ்னோடன் அமெரிக்க அரசுக்கு எதிரான பல உண்மைகளை போட்டுடைதுக் கொண்டே தான் இருக்கிறார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  பைவ் ஐஸ் ஒத்துழைப்பு :

  ஸ்னோடன் அம்பலப்படுத்தும் பெரும்பாலான தகவல்கள் மற்றும் ரகசிய திட்டங்கள் எல்லாம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (NSA), தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பைவ் ஐஸ் (Five Eyes) எனப்படும் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒத்துழைப்புடன் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  பைவ் ஐஸ் :

  பலதரப்பு யூகேயுஎஸ்ஏ (UKUSA) ஒப்பந்தம், சமிக்கை உளவுத்துறை கூட்டு ஒத்துழைப்பு என பல ஒப்பந்தகளின் கீழ்இயங்கும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து , ஐக்கிய ராஜ்யம் மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஒரு புலனாய்வு கூட்டணியை தான் 'பைவ் ஐஸ்' (Five Eyes) என்கிறர்கள்.

  ரகசிய கோப்புகள் :

  15,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய கோப்புகள், 58,000-க்கும் மேற்பட்ட பிரிட்டன் கோப்புகள் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் 1.7 மில்லியன் கோப்புகள் உட்படபெரும் எண்ணிக்கையிலான ரகசிய கோப்புகள் ஸ்னோடனிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  மிகவும் துல்லியமான பாதுகாப்பு :

  ஸ்னோடன் நகல் எடுத்த ரகசிய ஆவணங்கள் எல்லாம் வெளியிடப்படும் வரையிலாக அதில் என்ன ரகசியம் இருக்கிறது என்பதை அவரால் கூட கண்டறியப்பட முடியாத வண்ணம் கோப்புகள் மிகவும் துல்லியமான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  மீண்டும் :

  உளவு, திருட்டு, துரோகம் என பல குற்றசாட்டுகளின் கீழ் பாதுகாப்பின்றி இருந்த ஸ்னோடன் ரஷ்யாவிற்கு பின்பு தற்போது வெனிசுவேலாவில் பாதுகாப்பாக தஞ்சம் புகுந்துள்ளதால் மீண்டும் பல ரகசியமான தகவல்களை அம்பலப்படுத்த தொடங்கியுள்ளார்.

  சென்டினல் இனங்கள் :

  தற்போது ஸ்னோடன், நாம் நினைப்பது போல் நீர் வெப்ப துவாரங்கள் ( hydro thermal vents), நிலத்தடி (Underground) மற்றும் பனி படர்ந்த துருவ பிரதேசங்களின் ( polar caps) கீழ் மனித உருக்கொண்ட, சென்டியன்ட் இனங்கள் (sentient species) மட்டும் வாழவில்லை என்று கோரியுள்ளார்.

  அரசாங்கத்திற்கு தெரியும் :

  மேலும் இந்த தகவலை பல 90-களில் இருந்தே நம் அரசாங்கத்திற்கு தெரியும் என்றும் ஸ்னோடன் கூறியுள்ளார்.

  அமைப்புகள் - தொழில்நுட்பங்கள் :

  இது சார்ந்த விளக்கத்தில் "கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஆழ்கடல் சோனார் தொழில்நுட்பங்கள் ஆகியவைகள் எல்லாமே அரசாங்கத்தின் ஒரு இரகசியமான தொழில்நுட்பங்களாகவே தான் பயன்படுத்தப்படுகின்றன."

  கட்டுப்பாடு :

  "அரசாங்கத்தால் நேரடியாக கட்டுபடுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பயன்படுத்த வழங்கப்படுவதில்லை. அதனால் தேவையான தகவல்களை பெறுவது மிகவும் அசாத்தியமான ஒரு காரியமாகி விடுகின்றது."

  பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி :

  டார்பா (DARPA) - அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (U.S. Department of Defense ) கீழ் இயங்கும் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை (The Defense Advanced Research Projects Agency) ஆகும்.

  அறிவார்ந்த இனங்கள் :

  டார்பாவை சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் பூமியின் மூடகம் (அதாவது பூமியின் உள்ளடக்கம் - ​) ஆனது, ஹோமோசேபியன்களை விட மிகவும் அறிவார்ந்த இனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று உறுதியாக கூறியுள்ளனர்.

  நிலைமை :

  "டார்பா ஒப்பந்தக்காரர்கள் கூறும் தகவலை சற்று யோசித்து பார்த்தால் அதில் ஒரு உண்மை இருப்பது தெரிய வருகிறது. அதாவது நீர் வெப்ப துவாரங்கள், நிலத்தடி மற்றும் பனி படர்ந்த துருவ பிரதேசங்கள் தான் நிலமைகள் (Conditions) தான், பல பில்லியன் ஆண்டுகளாய் நிலையான (அதிகமான அல்லது குறைவான) நிலைமைகளை கொண்டுள்ள ஒரு இடமாகும்."

  தீவிரம் :

  எக்ஸ்ட்ரமோபைல்ஸ் என்ற இனமானது (தமிழில் உச்சவிரும்பி என்பர்) மனித இனத்தோடு ஒப்பிடும் ஒத்து எந்தவொரு தீவிரமான சூழலிலும் வாழக்கூடிய ஒரு உயிரினமாகும்.

  முன்னேற்றம் :

  அவ்வகை உயிரினங்கள் ஆனது ஒரு துரிதமான வேகத்தில் விருத்தியடைதல் மற்றும் புலனாய்வு ஆகியவைகளில் முன்னேறியுள்ளன என்று கூறப்பட்டாலும் அவைகள் எந்த ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்காமல் வெறுமனே ஒரே விகிதத்தில் உருவானவைகள் தான் என்று கூறியுள்ளார் ஸ்னோடன்.

  பகீர் தகவல் :

  அப்படியாக பூமிக்கு அடியில் வாழும் ஒரு தீவிரமான இனத்தை பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் விளக்கங்கள் பற்றியும் தினமும் அமெரிக்க அதிபருக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று பகீர் தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஸ்னோடன்.

  பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு :

  பூமிக்குள் வாழும் தீவிரமான இனத்தின் தொழில்நுட்பம் ஆனது, நம் தொழில்நுட்பத்தை விட பல மடங்கு அதிநவீனமானது என்றும், எந்த விதமான போர் ஏற்பட்டாலும் மனித இனம் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் வல்லுனர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றன என்றும் ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.

  எறும்புக்கூட்டம் :

  அந்த தீவிரமான இனத்திற்கு முன்பு மனித இனம் ஆனது எறும்புக்கூட்டம் போல ஆகையால் அவர்கள் நம்மை புரிந்து கொள்ளவோ அல்லது தொடர்பு கொள்ளவோ முயற்சிக்க கூட மாட்டர்கள் என்கிறார்கள் என்ற கருத்தையும் முன் வைக்கிறார் ஸ்னோடன்.

  குழப்பமான ஒன்று :

  இதுபோன்ற மிகவும் ஆபத்தான ரகசியங்களையும் தகவல்களையும் பொது மக்களிடம் தெரிவிப்பது என்பது எப்போதுமே ஒரு குழப்பமான ஒன்று தான் என்ற கருத்தையும் ஸ்னோடன் முன்வைத்துள்ளார்.

  மேலும் படிக்க :

  அடடா.. இத்தனை வருஷமா 'இது' தெரியாம போச்சே...!!?


  ஏலியன்கள் தகவல்கள் அனுப்பி 'உள்ளன'..! ஆனால் அவைகள்..?!


  நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Edward Snowden Leaked An Incredible Secret Buried Below Our Feet. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more