Home
News

Three dot Menu-விற்கு பின்னால் ஒளிந்திருக்கும் பட்டன்.. சைலன்ட் ஆக WhatsApp-க்கு வந்த புது அம்சம்!

சலிப்படைந்து போகும் அளவிற்கு நம்மையெல்லாம் காத்திருக்க வைத்திருந்தாலும் கூட, சில விஷயங்கள் நம் கைகளுக்கு வந்து சேரும் போது.. ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்களேன்.. அது எல்லா சலிப்புகளையும் தவிடு பொடியாக்கி விடும். அப்படியான ஒரு விஷயம் தான் வாட்ஸ்அப்பில் (WhatsApp) நடந்துள்ளது.

"இப்போ வந்துவிடும்.. அப்போ வந்துவிடும்" என்று கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சம் (Most Awaited Feature), வாட்ஸ்அப்பில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது வேறொன்றுமில்லை - அனுப்பட்ட ஒரு மெசேஜ்களை (Sent Messages) திருத்தம் செய்ய உதவும் எடிட் பட்டன் (Edit Button) தான்!

ஒருவழியாக WhatsApp-க்கு வந்தது Edit பட்டன்!

சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தன! வாட்ஸ்அப் எடிட் பட்டன் (WhatsApp Edit Button) ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெவலப்பர்கள் (Developers) மத்தியில் சோதனை (Testing) செய்யப்பட்டது. அப்போது ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பப்பட்ட அடுத்த 15 நிமிடங்கள் வரை (Withing 15 Minutes), அடுத்த அதை எடிட் செய்யும் அம்சம் அணுக கிடைத்தது.

தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனுக்கு (WhatsApp Beta Version) வந்துள்ளது போல் தெரிகிறது. வாட்ஸ்அப்பீட்டா இன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் பீட்டாவின் கீழ் ஆண்ட்ராய்டு 2.23.10.13-ஐ பயன்படுத்தும் சில பயனர்களால் க்ரூப்ஸ் (Groups) மற்றும் சாட்களில் (Chats) உள்ள மெசேஜ்களை எடிட் செய்ய முடிகிறது.

த்ரீ டாட் மெனுவில் ஒளிந்திருக்கும் எடிட் பட்டன்! வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள எடிட் பட்டன் ஆனது நேரடியாக கிடைக்கவில்லை. மாறாக ஒரு மெசேஜை தேர்ந்தெடுக்கும்போது ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் தோன்றும் த்ரீ டாட் மெனுவின் (Three dot Menu) உள்ளே அணுக கிடைக்கிறது. அதாவது இது "கிட்டத்தட்ட" த்ரீ டாட் மெனுவிற்குள் மறைந்துள்ளது என்றே கூறலாம்.

ஒருமுறை அனுப்பிய மெசேஜை எத்தனை முறை எடிட் செய்யலாம் என்பதற்கு எந்த வரம்பும் (Limit) இல்லை என்பது போல் தெரிகிறது. அதாவது ஒரு மெசேஜை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம். ஆனால், குறிப்பிட்ட மெசேஜை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே அதை செய்ய முடியும். அதாவது இந்த அம்சத்திற்கு நேரக்கேடு (Time Limit) உள்ளது என்று அர்த்தம்.

ஒரு மெசேஜை அனுப்பிய 15 நிமிடங்களுக்கு பிறகு அந்த மெசேஜில் டைப் செய்த வார்த்தைகளில் எந்த மாற்றங்களையும் உங்களால் செய்ய முடியாது. மேலும் திருத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு மெசேஜும் அது எடிட் செய்யப்பட்ட மெசேஜ் என்பதை வெளிப்படுத்தும் ஒரு லேபிளையும் (Edited Label) கொண்டிருக்கும்.

தற்போதைய நிலவரப்படி, வாட்ஸ்அப் எடிட் பட்டன் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) கிடைக்கிறது மற்றும் இந்த அம்சம் டெக்ஸ்ட் மெசேஜைகளில் (Text Messages) மட்டுமே வேலை செய்யும். இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறித்த டைம்லைனை (Timeline) வாட்ஸ்அப் இன்னும் பகிரவில்லை.

எடிட் பட்டன் தவிர்த்து, வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் 12 புதிய அம்சங்களில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அவைகள் அனைத்துமே வாட்ஸ்அப்பிற்கும், அதன் இன்டர்பேஸிற்கும் (Interface) குறிப்பிடத்தக்க மாற்றத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த 12 புதிய அம்சங்களில் வெரிஃபிகேஷன் ஸ்டேட்டஸ் (Verification Status), ம்யூட் நோட்டிஃபிக்கேஷன் பட்டன் (Mute notification button) போன்றவைகளும் அடங்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Edit Button For Sent Messages Now Available in WhatsApp Beta Version Hidden Under Three Dot Menu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X