சானிட்டைஸர்ல ஒரு டுவிஸ்ட் இருக்கு: வைரல் வீடியோ., CM Palaniswamy கொடுத்த ரியாக்ஷன்!
சானிட்டைஸரை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்ற டுவிட்டர் வாசியின் வீடியோவுக்கு முதலமைச்ர் பழனிசாமி டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு
கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலைபடி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மற்ற சில நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும் இந்தியாவில் பிற நாட்டவர்கள் பாராட்டு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் 3 சதவீதம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6430 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை அங்குமட்டும் 6430 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோவாவில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு மட்டும் 100 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று
குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 112 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2376 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக சானிட்டைஸர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு வீடியோ
இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் முகமது ரபீக் என்ற ஒருவர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு தந்தை மற்றும் மகள் இருவரும் சேர்ந்து ஒரு தட்டை தண்ணீரில் நன்றாக கழுவி சானிட்டைஸர் ஊத்துகிறார்கள். அதன்பின் அந்த சானிட்டைஸரில் நெருப்பு பொருத்துகிறார்கள்.
சானிட்டைஸ்ர் மீது வைத்த நெருப்பு
ஆனால் அந்த தட்டில் இருந்த சானிட்டைஸ்ர் மீது வைத்த நெருப்பு ஏதும் தெரியவில்லை. இருப்பினும் அதன் அருகில் பேப்பர் கொண்டு சென்றவுடன் பேப்பர் பற்றிக் கொண்டு எரியத் தொடங்குகிறது. இதையடுத்து சானிட்டைஸரை கவனமாக கையாளும்படி அவர் தெரிவிக்கிறார். அதன்பின் அந்த சானிட்டைஸருக்கு மேல் அவர் கை வைக்கிறார். இன்னும் நெருப்பு எரிகிறது. என இரண்டாவது பேப்பர் வைக்கிறார் அதுவும் பற்றி எரிகிறது. இதை முதலமைச்சரின் டுவிட்டர் பேரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இன்று சுமார் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் திரு.சைமன் அவர்களின் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 22, 2020
அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு
அதேபோல் அவர் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு சானிட்டைஸர் யூஸ் பண்ணும்போது பார்த்து யூஸ் பண்ணுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுங்கள் அரசாங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் நன்றி வணக்கம் எனவும் பதிவிட்டிருந்தார்.

நல்லதொரு விழிப்புணர்வு
இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி, இந்த நேரத்தில் தேவையான நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும். மக்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்ய இந்த விழிப்புணர்வு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








