இதெல்லாம் மிகப் பெரிய துரோகம் Vivo: இப்படி கூடவா வரி ஏய்ப்பு மோசடி செய்வீங்க.!

|

தற்போது சீன நிறுவனங்களுக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது ஏற்கனவே சியோமி நிறுவனம் சிக்கிய நிலையில் தற்போது விவோ (Vivo) நிறுவனமும் ஒரு பெரிய மோசடி செய்து அமலாக்க துறையிடம் சிக்கியுள்ளது.

 44 இடங்களில் சோதனை

44 இடங்களில் சோதனை

அதாவது கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி நிறுவனங்கள் வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? இப்படி ஒரு மடிப்பு, அப்படி ஒரு மடிப்பு! ரெடியாகும் Xiaomi Mi Mix Fold 2!ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? இப்படி ஒரு மடிப்பு, அப்படி ஒரு மடிப்பு! ரெடியாகும் Xiaomi Mi Mix Fold 2!

62,476 கோடி ரூபாய்

62,476 கோடி ரூபாய்

அதேபோல் விவோ-இன் இந்தியப் பிரிவு மொத்த Turnover-ல் 50 சதவீத பணத்தைச் சுமார் 62,476 கோடி ரூபாயை இந்தியாவில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

இன்று பூமியை நெருங்கும் ஆபத்தான சிறுகோள்: இறுதி நொடியில் கண்டுபிடித்த NASA- பூமிக்கு ஆபத்தா?இன்று பூமியை நெருங்கும் ஆபத்தான சிறுகோள்: இறுதி நொடியில் கண்டுபிடித்த NASA- பூமிக்கு ஆபத்தா?

வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த பணம்

வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த பணம்

குறிப்பாக விவோ நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்க துறை செய்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான 119 வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.465 கோடி மதிப்புள்ள பணம், ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

 விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள்

விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள்

மேலும் இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களாக ஹுஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகியோர் செயல்பட்டு வந்தனர். ஆனால் இந்த சோதனை தொடங்கியபின் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களா ஹூஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகிய இரண்டு பேரும் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விவோ நிறுவனத்தின் இயஙகுனர்கள் இரண்டு பேர் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்போ, விவோ எல்லாம் ஓரமா போங்க!.. Xiaomi 12 Lite 5G அறிமுகம்? அட்டகாசமான அம்சங்கள்.!ஒப்போ, விவோ எல்லாம் ஓரமா போங்க!.. Xiaomi 12 Lite 5G அறிமுகம்? அட்டகாசமான அம்சங்கள்.!

இது முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல

விவோ நிறுவனம் தற்போது சிக்கியது முதல் முறை அல்ல. அதாவது ஏற்கனவே ஒரு பிரச்சனையில் கடந்த 2020-ம் ஆண்டு சிக்கியது. அதாவது செல்போன் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு தனித்தனி ஐஎம்இஐ எண்ணை கொண்டிருக்க வேண்டும் என்று இந்தியதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2017-ம் ஆண்டு உத்தரவுபிறப்பித்தது.

பணமோசடி வழக்கில் சோதனை: பிரபல செல்போன் நிறுவன இயக்குனர்கள் செஞ்ச வேலைய பாத்தீங்களா?பணமோசடி வழக்கில் சோதனை: பிரபல செல்போன் நிறுவன இயக்குனர்கள் செஞ்ச வேலைய பாத்தீங்களா?

 13500 போன்கள்

13500 போன்கள்

மேலும் இது தவறும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.
ஆனால் விவோ நிறுவனத்தின் சுமார் 13500 போன்கள் ஒரே இஎம்இஐ எண்ணை கொண்டிருந்தது 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து உத்தரப் பிரதேச காவல்துறை விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.

Ultrahuman ஸ்மார்ட் ரிங் தான் இனி புது டிரெண்டா? விரல் அடக்க டிவைஸில் இவ்ளோ மேட்டரா? ஆனா விலை தான்!Ultrahuman ஸ்மார்ட் ரிங் தான் இனி புது டிரெண்டா? விரல் அடக்க டிவைஸில் இவ்ளோ மேட்டரா? ஆனா விலை தான்!

முன்பு சியோமி நிறுவனமும் சிக்கியது

முன்பு சியோமி நிறுவனமும் சிக்கியது

அதேபோல் விவோ நிறுவனத்திற்கு முன்பே சியோமி நிறுவனமும் ஒரு பிரச்சனையில் சிக்கியது. கடந்த ஏப்ரல் மாதம் சியோமி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அதில் விதிக்கு புறம்பான அந்நிய பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி சியோமி நிறுவனத்திடம்சுமார் ரூ.5,551 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னுமா சின்ன டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? Lenovo Tab P11 Plus பாருங்க - பட்ஜெட்போன் விலையில் டேப்லெட் அறிமுகம்.!இன்னுமா சின்ன டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? Lenovo Tab P11 Plus பாருங்க - பட்ஜெட்போன் விலையில் டேப்லெட் அறிமுகம்.!

எல்லைப் பிரச்சனை

எல்லைப் பிரச்சனை

2020-ம் ஆண்டு லடாக் பகுதியில் இந்தியாவுக்கு, சீனாவுக்கு இடையில் எல்லைப் பிரச்சனை தீவரமடைந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள் மீதும், அதன் தயாரிப்புகள் மீதும் அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள்

இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த இரண்டு வருடங்காளாக இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் மீது மத்திய அரசு கெடுபிடி காட்டி வருகிறது. தற்போது இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதை விட இந்திய நிறுவனங்களின் போன்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
ED said Vivo sent 50% of its turnover to China to avoid paying taxes in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X