மோசடி செய்கிறதா Vivo நிறுவனம்? விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.!

|

இந்திய நிறுவனங்களின் ஸ்மாரட்போன்களை விட சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தான் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்

இந்நிலையில் விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அதாவது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகலாயா, மாகாராஷ்டிரா போன்ற இடஙகளில் உள்ள விவோ தொடர்புடைய இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

2023-ல் கம்மி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க முடியாதா? லேட் பண்ணாதீங்க! இனி இதுவும் காஸ்ட்லீ தான்2023-ல் கம்மி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க முடியாதா? லேட் பண்ணாதீங்க! இனி இதுவும் காஸ்ட்லீ தான்

விவோ விநியோக அமைப்பு

விவோ விநியோக அமைப்பு

பின்பு போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த விவோ விநியோக அமைப்பின் மீது, டெல்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையை வைத்தே, அமலாக்கத் துறையும் விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.

Airtel அறிமுகம் செய்த Airtel அறிமுகம் செய்த "ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம்": ரூ.109 முதல் ரூ.131 வரை மொத்தம் 4 திட்டங்கள்!

 போலி ஆவணங்கள்

போலி ஆவணங்கள்

மேலும் இதன் தொடர்ச்சியாக விவோ தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி நிறுவனங்கள் வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறைதகவல் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!

ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு

ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு

அதேபோல் இந்நிறுவனம் ஏற்கனவே ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தது. அதாவது செல்போன் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் போன்களுக்கு தனித்தனி ஐஎம்இஐ எண்ணை கொண்டிருக்க வேண்டும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டுஉத்தரவு பிறப்பித்தது.

இது தவறும்பட்சத்தில்

பின்பு இது தவறும்பட்சத்தில் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் விவோ நிறுவனத்தின் 13500 ஸ்மார்ட்போன்கள் ஒரே இஎம்இஐ எண்ணைக் கொண்டிருந்தது 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து உத்தரப் பிரதேச காவல்துறை விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி மெயின் கேமரா: மாஸ் காட்டும் Infinix நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம்?108எம்பி மெயின் கேமரா: மாஸ் காட்டும் Infinix நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம்?

இதற்கு முன்பு சியோமி கூட சிக்கியது

இதற்கு முன்பு சியோமி கூட சிக்கியது

விவோ நிறுவனத்திற்கு முன்பே சியோமி நிறுவனமும் அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் சியோமி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது விதிக்கு புறம்பான அந்நிய பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அந்த நிறுவனத்திலிருந்து சுமார் ரூ.5,551 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

அட்ராசக்கை! இந்த Tecno போன்கள் எல்லாம் இவ்வளவு கம்மி விலையா? புது போன் வாங்கும் நேரம்!அட்ராசக்கை! இந்த Tecno போன்கள் எல்லாம் இவ்வளவு கம்மி விலையா? புது போன் வாங்கும் நேரம்!

சியோமி நிறுவனம்

குறிப்பாக சியோமி நிறுவனம் உரிமத் தொகை எனும் பெயரில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கும் 3 நிறுவனங்களுக்கு அதிகளவு பணப் பரிவர்த்தனை செய்துள்ளது.

ஆனால் சியோமி நிறுவனம் இந்தியாவிலேயே செல்போன்களையும், அதன் மூலப் பொருட்களையும் கொள்முதல் செய்கிறது. குறிப்பாக வெளிநாட்டுநிறுவனங்களிடமிருந்து அந்நிறுவனம் எந்தவித சேவையையும் பெறவில்லை என அமலாக்கத் துறை கூறியுள்ளது.

ஆரம்பிக்கலாமா? OnePlus Nord 2T இன்று முதல் விற்பனை.. சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்ஆரம்பிக்கலாமா? OnePlus Nord 2T இன்று முதல் விற்பனை.. சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்

சீன நிறுவனங்களுக்கு நேரம் சரியில்லை

சீன நிறுவனங்களுக்கு நேரம் சரியில்லை

கடந்த 2020-ஆண்டு லடாக் பகுதியில் இந்தியாவுக்கு, சீனாவுக்கு இடையில் எல்லைப் பிரச்சனை தீவரமடைந்தது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து தான், இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள் மீதும், அதன் தயாரிப்புகள் மீதும் அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் சீன நிறுவனங்கள் மீது மத்திய அரசு கெடுபிடி காட்டி வருகிறது என்றே கூறலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
ED raids Vivo related locations on money laundering charges: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X