எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு!

|

இகாமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் விற்கும் பொருட்களுக்கு தயாரிப்பு நாடுகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

 சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

இதையடுத்து டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.

பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல்

பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல்

இந்த நிலையில் இந்தியாவின் ஆன்லைன் விற்பனை தளத்தில் முன்னனி நிறுவனங்களாக திகழும் பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற தளங்களுக்கு அரசு உத்தரவு ஒன்றை வெளியுட்டுள்ளது. இனி ஆன்லைன் தளங்களில் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்த தகவல்களை வழங்கும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனை தளங்கள்

ஆன்லைன் விற்பனை தளங்கள்

ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்கப்படும் பொருட்கள் அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது அதாவது (Country of origin)என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்த செயல்முறையை ஆகஸ்ட் 1 முதல் பின்பற்றும்படி டிபிஐஐடி இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கால அவகாசம்கோரி கடிதம்

கால அவகாசம்கோரி கடிதம்

இந்த அறிவிப்பையடுத்து இகாமர்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கால அவகாசம்கோரி கடிதம் எழுதியுள்ளது. இதைசெயல்படுத்த சிறிது காலம் தேவைப்படும் என்பதால் இந்த அவகாசம் கோரப்பட்டுள்ளது.

சீன பொருட்களுக்கு எதிரான மனநிலை

சீன பொருட்களுக்கு எதிரான மனநிலை

இந்தியர்கள் மத்தியில் சீன பொருட்களுக்கு எதிரான மனநிலை உருவாகி வரும் இந்த நேரத்தில் இகாமர்ஸ் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதன் தயாரிப்பு நாடுகளின் பெயரை காட்டுவது என்பது சீன பொருட்கள் விற்பனையில் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு

சீன தயாரிப்புகளில் பெரும்பாலானவை இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலமாகவே விற்கப்படுகிறது என்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்களால் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என குறிப்பிட வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அரசிடம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என வர்த்தக குழு அழைப்பு விடுத்துள்ளன.

உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலி

உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலி

உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு என்ற சவாலில் பங்கேற்கும்படி இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இதுபோன்ற தயாரிப்பகளோ, தயாரிப்புகளை உருவாக்குவதற்கான திறமையோ நோக்கமோ இருப்பதாக உணர்பவர்கள் இந்த சவாலில் பங்கேற்கலாம். தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

source: dnaindia.com

Best Mobiles in India

English summary
Ecommerce will display the country of origin of every product government asks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X