நாசாவை நம்பினால் 'நாசமாய்' போக வேண்டியது தான் போல..!!

|

டைனோசர் இனம் அழிந்ததற்கு காரணம் பூமியோடு நிகழ்ந்த ஒரு எரிகல் மோதல் நிகழ்வுதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதெல்லாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் நடந்தது, இப்போதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நாம் சாமாதானம் ஆகிக்கொண்டால் அது கிட்டத்தட்ட ஒரு முட்டாள்த்தனம் தான்..!

நாசா மற்றும் உலகின் பல விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களிடமும், மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள் மோதல் நிகழ்வானது எங்கு அதிகம் நிகழும் என்பதை பற்றிய சரியான தெளிவு இல்லாமல் தான் இருக்கிறது உட்பட பல தகவல்கள் வெளியாகியுள்ளது..!

எச்சரிக்கை :

எச்சரிக்கை :

பூமி கிரகத்தின் பாதுகாப்பு நிலைகள் ஆனது நாம் நினைக்கும் அளவிற்கு பாதுகாப்பானது கிடையாது அது எப்போது வேண்டுமானாலும் தகர்க்கப்படலாம்.

வாய்ப்பு :

வாய்ப்பு :

அதாவது, பூமி கிரகத்தோடு மோதும் வாய்ப்பு கொண்ட குறுங்கோள்கள், பூமி கிரகத்திற்கு அருகில் 'எங்கும் நிறைந்திருக்கிறது' அதுமட்டுமின்றி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அவைகளிடமிருந்து தப்பிக்கும் அளவிற்கு பூமி 'பாதுகாப்பானது' கிடையாது.

ஒருங்கிணைப்பு :

ஒருங்கிணைப்பு :

குறுங்கோள்களிடம் இருந்து பூமி கிரகத்தை காப்பாற்றும் நோக்கத்தில் உருவாக்க்கப்பட்டது தான் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (Planetary Defense Coordination Office).

 அதிநவீன முறைகள் :

அதிநவீன முறைகள் :

கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் கீழ் பைர்பால் (Fireball) மற்றும் பொலிட் ரிப்போர்ட்ஸ் சிஸ்டம் (Bolide Reports system) போன்ற அதிநவீன முறைகள் கொண்டு பூமி கிரக பாதுக்காப்பு விடயங்கள் ஆராயப்படுகிறது.

தெளிவு :

தெளிவு :

இருப்பினும் கூட, மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள் மோதல் நிகழ்வானது எங்கு அதிகம் நிகழும் என்பதை பற்றிய சரியான தெளிவு நாசாவிடம் இல்லை.

கூடுதல் முயற்சி :

கூடுதல் முயற்சி :

குறுங்கோள்களின் கவனிக்கத்தக்க முறைகள் பற்றிய தெளிவை பெறுவதில் நாசா மட்டுமின்றி பிற உலகம் முழுவதும் மற்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் கூடுதல் முயற்சிகளை கையாள வேண்டியிருக்கிறது.

எரிக்கற்கள் சுற்றுச்சூழல் :

எரிக்கற்கள் சுற்றுச்சூழல் :

நாசாவின் மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் மையத்தில் (Marshall Space Flight Center) உள்ள, எரிக்கற்கள் சுற்றுச்சூழல் அலுவலகத்தை (Meteoroid Environment Office) சேர்ந்த ஆய்வாளர் வில்லியம் கூக் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு :

மூன்றில் ஒரு பங்கு :

அதாவது, பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள்கள் பூமியுடன் மோதல் நிகழ்த்த மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளது.

பொலிட் நிகழ்வுகள் :

பொலிட் நிகழ்வுகள் :

1994 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலாக நடத்த பொலிட் நிகழ்வுகள், அதாவது பூமியின் வளிமண்டலத்திலேயே சிதைந்து போன நிகழ்வுகள்.

70 சதவிகிதம் :

70 சதவிகிதம் :

மேலும் அவர் "பூமியில் 70 சதவிகிதம் கடல் இருப்பதால், பூமியோடு மோதும் வாய்ப்பு கொண்ட குறுங்கோள்கள் கடலில் விழ 70 சதவிகிதம் வாய்ப்புள்ளது" என்றும் கூறியுள்ளார்.

வெளிப்படை :

வெளிப்படை :

மேலும் "நாசா வெளியிட்டுள்ள தகவல்கள் சீரற்ற ஒன்றாகத்தான் தெரிகிறது. நாசாவிடம் எந்த விதமான கவனிக்கத்தக்க அமைப்பும் இல்லை என்பது புரியும்" என்றும் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இன்றி :

பாதுகாப்பு இன்றி :

இதன் மூலம் ஒட்டுமொத்த பூமியும் சாத்தியமான எரிகல் அல்லது குறுங்கோள்கள் மோதல்களுக்கான எந்த விதமான பாதுகாப்பும் இன்றி தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் வில்லியம் கூக்.

 செல்யபின்ஸ்க் :

செல்யபின்ஸ்க் :

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் செல்யபின்ஸ்க் நிகழ்வு போன்ற விடயங்களை கண்டறிவதற்கு கண்காணி ப் பதற்கும் எந்த விதமான அமைப்பும் இதுவரி இல்லை என்று குற்றம் சாட்டுகிறார் மார்க் போஸ்லோ.

எரி நட்சத்திரம் :

எரி நட்சத்திரம் :

செல்யபின்ஸ்க் நிகழ்வு என்பது ரஷ்யாவில் 15 பிப்ரவரி 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள என்ற இடத்தில விழுந்த எரி நட்சத்திரம் விழுந்த சம்பவமாகும்.

 பெளதீக ஆய்வாளர் :

பெளதீக ஆய்வாளர் :

மார்க் போஸ்லோ - சான்டியா தேசிய ஆய்வகத்தில் பெளதீக ஆய்வாளர் ஆவார் என்பதும், 'ஆஸ்ட்ராய்ட் டே'வின் (Asteroid Day) நிறுவனர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நம்புற மாதிரி இருக்காது, ஆனாலும்.. நம்பித்தான் ஆகணும்...!


இந்த 7 அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு 'அந்த நோய்' நிச்சயம்..!!


ஏலியன்கள் தகவல்கள் அனுப்பி 'உள்ளன'..! ஆனால் அவைகள்..?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
NASA warns Earth left vulnerable as asteroid protection is ‘NOWHERE NEAR’ what we need. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X