புதிய சர்ச்சை : பூமியை காப்பாற்றியதே ஏலியன்கள் தான்..!
ஏலியன்கள், வேற்றுகிரக வாசிகள் என்று சொன்னாலே பெரும்பாலும் அழிவு எண்ணம் தான் வரும். அந்த அளவிலான வேற்றுகிரக வாசம் மீதான தேடல்களுக்கும் எதிர்பார்புகளும் அதிகரித்துக் கொண்டே போகும் காலகட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான எட்கர் மிச்சேல் (Edgar Mitchell) 'உலகை காப்பாற்றியாதே ஏலியன்கள் தான்' என்று முற்றிலும் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.
ஏலியன்கள் அனுப்பிய 'மேசேஜ்கள்'..!
மேலும் அது பற்றிய விரிவான தகவல்களையும், அது சார்ந்த ஆதாரங்களையும் எட்கர் மிச்சேல் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீயாய் பரவின :
பனிப்போர் (Cold War) நடைப்பெற்ற காலகட்டத்தில் தான் ஏலியன்கள் சார்ந்த பல செய்திகள் உலகம் முழுக்க தீயாய் பரவின.

பறக்கும் தட்டுகள் :
அந்த செய்திகளில், ஏலியனன்களின் விமானமாக கருதப்படும் யூஎஃப்ஓ (UFO), அதாவது பறக்கும் தட்டுகள் பெரிய அளவிலான சர்ச்சைகளை கிளப்பின.

வளர்ச்சி போர் :
பனிப்போர் என்பது இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் 1990-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் நடைபெற்ற ஒரு வளர்ச்சி போர் ஆகும்.

முன்னேற்றம் :
பனிப்போர் காலகட்டத்தில் தான் இரு நாடுகளும் ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவைகளில் மாபெரும் முன்னேற்றங்களை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ 14 :
அப்படியானதொரு காலகட்டத்தில், 1971-ஆம் ஆண்டு அமெரிக்காவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் தான் - அப்போலோ 14..!

எட்கர் மிச்சேல் :
அந்த விண்கலத்தில் பயணித்த மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவர் தான் - எட்கர் மிச்சேல். நிலவில் கால் தடம் பதித்த 6-வது மனிதரும் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு தகவல் :
சமீபத்தில் எட்கர் மிச்சேல், பனிப்போரின் போது ஏலியன்கள் பூமிக்கு வந்ததாகவும், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையே நடக்க இருந்த அணு ஆயுத போரை நிறுத்தியதே ஏலியன்கள் தான் என்று பரபரப்பு தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.

வெடிப்பு சம்பவம் :
அமெரிக்காவால் மெக்ஸிகோவின் வைட் சாண்ட் பாலைவனத்தில் நிகழ்த்தப்பட்ட உலகின் முதல் அணு ஆயுத வெடிப்பு சம்பவம் வேற்றுகிரக வாசிகளின் கவனத்தை ஈர்த்து இருக்கலாம் என்று இவர் நம்புகிறார்.

ராணுவ திறன் :
மேலும் ஏலியன்கள் நமது ராணுவ திறன்களை அறிந்து கொள்ள விரும்பினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அமைதி :
அதுமட்டுமின்றி, ஏலியன்கள் நம்மை நன்கு கண்காணித்தார்கள் என்றும். போர்கள் இன்றி உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்களம் :
பனிப்போரில் ஈடுபட்ட போர் விமான ஒட்டிகள் பலரிடம் நான் பேசியுள்ளேன். அவர்களில் பலர் போர்களத்தில் அடிக்கடி 'யூஎஃப்ஓ'க்களை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை :
மேலும் பசிபிக் கடற்கரை ராணுவத்தளத்தில் உள்ள வீரர்கள், தங்களின் பரிசோதனை ஏவுகணைகளை 'யூஎஃப்ஓ'க்கள் தாக்கி அழித்ததாகவும் கூறியுள்ளார்கள் என்ற சர்ச்சையான கருத்தையும் எட்கர் மிச்சேல் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் :
மேலும் மிட்சல் நம்பிக்கையின்படி, 70 ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு வந்த ஏலியன்களை (ரோஸ்வெல் சம்பவம்) அமெரிக்க அரசாங்கம் உயிருடன் பிடித்து வைத்துள்ளனர் என்றும், அதை இந்நாள் வரை மூடி மறைப்பதாகவும் சந்தேகம் நிலவுகிறது

ரோஸ்வெல் சம்பவம் :
நியூ மெக்ஸிகோ நகரில் ரோஸ்வெல் என்ற இடத்தில் ஜூலை மாதம் 1947-ஆம் ஆண்டு நடந்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பறக்கும் பொருள் ஒன்று விபத்துக்குள்ளானது, அது தான் ஆகும் - ரோஸ்வெல் சம்பவம் (Roswell incident).

அறிக்கை :
ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது என்பதற்கு 2008-ஆம் ஆண்டு "நாங்கள் யூஎஃப்ஓக்களை பின் தொடரவில்லை. நாசா எங்கும், எந்த விதமான ஏலியன் தேடல்களிலும் ஈடுபடவில்லை..!" என்று நாசா வெளியிட்ட அறிக்கையே சான்றாகும்..!

நாசா :
அந்த அறிக்கையில் "டாக்டர் மிட்செல் ஒரு சிறந்த அமெரிக்கர். ஆனால், இந்த விடயத்தில் அவரின் கருத்துகளை பகிர நாங்கள் விரும்பவில்லை" என்று நாசா தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பயம் :
ஏலியன்களின் அதீத தொழில்நுட்ப சக்திகள் சோவியத் ஒன்றியத்திடம் கிடைத்து விடக்கூடாது என்ற பயத்தில்தான் அமெரிக்கா, ரோஸ்வெல் சம்பவத்தை மறைகிறது என்றும் மிட்செல் நம்புகிறார்.

சோனிக் என்ஜினீயர் ரகசியங்கள் :
மேலும், 1996-ஆம் ஆண்டு வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து சோனிக் என்ஜினீயர் ரகசியங்களை அமெரிக்கா பெற்றுள்ளது என்று டாக்டர் மிட்செல் கருத்து கூறியதும் குறிப்பிடத்தக்கது.

பறக்கும் தட்டு :
புகைப்படங்களில் சிக்கிய யூஎஃப்ஓக்களை பற்றி ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் செய்த 'ட்வீட்' (Tweet)..!

ரஷ்ய தொலைக்காட்சி :
புகைப்படங்களில் சிக்கிய யூஎஃப்ஓக்களை பற்றி ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் செய்த 'ட்வீட்'..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications








