பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!

|

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுதும் பல நாடுகளில் நீண்டகால ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்துள்ளனர், உலகளவில் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன, குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு பூமியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, தற்பொழுது நம்பமுடியாத மிகப்பெரிய மற்றொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகம் முழுதும் இப்பொழுது நிலையே மாறியுள்ளது

உலகம் முழுதும் இப்பொழுது நிலையே மாறியுள்ளது

மக்களின் அவசர வாழ்க்கை நேரம் காணாமல் போய்விட்டது. கொரோனா பாதிப்பிற்குப் பின்னால், உலகம் முழுதும் இப்பொழுது நிலையே மாறியுள்ளது, குறிப்பாக நகரங்களில் உள்ள மக்களின் நகர வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களின் உயிருக்கு பாதிப்பளிக்கும் கொடூரமான நோயாக இருந்தாலும், மற்றொரு புறம் கொரோனா உண்மையில் பூமிக்குப் பல நல்ல மாற்றங்களையே கொண்டுவந்துள்ளது என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.

பூமியில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மாற்றம்

பூமியில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மாற்றம்

சாத்தியமே இல்லை என்று நினைத்த பல காரியங்களை இந்த கொரோனா நிகழ்வு செய்து காட்டியுள்ளது. குறைந்த காற்று மாசு, குறைந்த கடல் மாசு, வெப்பநிலையில் மாற்றம் மற்றும் ஓசோன் படலத்திலிருந்த மாபெரும் ஓட்டை அடைந்தது என்று பல மாற்றங்கள் பூமியில் கடந்த சில வாரங்களில் நடந்தேறியுள்ளது. அந்த வரிசையில் விஞ்ஞானிகள் பூமியில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மற்றொரு மாற்றத்தை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

UFO பற்றி அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்ட ஆதார வீடியோக்கள்! இது ஒரு வரலாற்று தருணம்!UFO பற்றி அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்ட ஆதார வீடியோக்கள்! இது ஒரு வரலாற்று தருணம்!

பூமியின் அதிர்வுகள்

பூமியின் அதிர்வுகள்

பூமியில் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திடாத மாற்றமாக, இந்த மாபெரும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று நில அதிர்வு ஆய்வாளர்கள் அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் மனித நடமாட்டம் மற்றும் வாகன சலசலப்பு ஆகியவை பெருமளவில் குறைந்துள்ளது.

அசையாமல் நிற்பது போன்று தரவு

அசையாமல் நிற்பது போன்று தரவு

இந்த கடுமையான அதிர்வுகள் குறைந்ததால் பூமியின் அதிர்வுகள் ஒட்டுமொத்தமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பூமி குறைவாக நகர்த்துவதற்குக் காரணமாகி கிரகம் 'அசையாமல்' நிற்பது போன்று பதிவுகள் பதிவாகியுள்ளது.

பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

30 முதல் 50 சதவிகிதம் குறைவு

30 முதல் 50 சதவிகிதம் குறைவு

பெல்ஜியத்தில் உள்ள ராயல் அப்சர்வேட்டரியில் புவியியலாளரும் நிலநடுக்கவியலாளருமான தாமஸ் லெகோக் கூறுகையில், நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் பூட்டுதல் தொடங்கியதிலிருந்து, சுற்றுப்புற நில அதிர்வு சத்தத்தில் 30 முதல் 50 சதவிகிதம் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் அந்த பகுதியில் அதிர்வுகள் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நில அதிர்வு தரவுகள் மிகவும் துல்லியமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

நில அதிர்வு வல்லுநர்கள் வெளியிட்ட தகவல்

நில அதிர்வு வல்லுநர்கள் வெளியிட்ட தகவல்

செய்சமொலொஜிஸ்ட்ஸ் (seismologists) என்று அழைக்கப்படும் நில அதிர்வு வல்லுநர்களால் சேகரிக்கப்பட்ட பூமியின் நில அதிர்வு தரவுகள், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சேகரித்துள்ள தகவல்கள் மிகவும் துல்லியமாகி வருகிறது, மிகச்சிறிய நடுக்கத்தைக் கூட இந்த கருவிகள் கண்டறியும் திறன் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மாற்றம்

இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மாற்றம்

பல அறிவியல் கருவிகள் நகர மையங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த தகவல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இங்கிலாந்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மேற்கு லண்டனில் ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற போக்கைக் கண்டறிந்துள்ளனர். இதேபோல் பூமியில் உள்ள பல இடங்களில் இதுவரை நிலவி வந்த நில அதிர்வுகள் முற்றிலுமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில பதிவான பதிவு

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில பதிவான பதிவு

அதேபோல், மனிதர்கள் அதிகம் புழக்கத்திலிருந்த இடங்களில் மட்டுமே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மனித நாகரிகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள தொலைதூர நிலையங்களில் எடுக்கப்பட்ட தரவுகள் எப்பொழுதும் போல இயல்பாகவே இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இயற்கை இடங்களில் நில அதிர்வுகள் அதிகமில்லை என்கிறது இவர்களின் தரவு.

கொரோனா, பூமிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளதா?

கொரோனா, பூமிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளதா?

ஒரு புறம் கொரோனா தோற்று மனிதர்களின் உயிரை வேட்டையாடி வருகிறது. ஆனால், மறுபுறம் இதுவரை சாத்தியமே இல்லை என்று நினைத்த நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது. உலகத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், ஒட்டுமொத்த வாகனங்கள் என அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களின் வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பூமிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Earth Is Vibrating Substantially Less Because Of Corona Pandemic Says Seismologists : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X