கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் : ரேம், மெமரி, டிஸ்ப்ளே சார்ந்த லீக்ஸ்.!

Written By:

இந்தாண்டு சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியானது அந்நிறுவனத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். அதிலிருந்து மீளும் ஒரு மிக வலுவான தயாரிப்பை தர வேண்டிய ஒரு சூழ்நிலையில் சாம்சங் நிறுவனம் உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் ஆகிய கருவிகள் சாம்சங் நிறுவனத்தின் 'கம்-பேக்' கருவிகளாக அமைய வேண்டும்.

அப்படியாக மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டு கருவிகளின் லீக்ஸ் தகவல்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் இருக்க தற்போது சமீபத்தில் வெளியாகியுள்ள லீக்ஸ் தகவல்கள் அக்கருவிகளின் ரேம், மெமரி மற்றும் டிஸ்ப்ளே ஆகியவைகளை பற்றிய செய்திகளை வெளியிட்டு இக்கருவிகள் ஒரு மிக திறமையான சாதனமாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
8ஜிபி ரேம்

8ஜிபி ரேம்

சாம்சங் தொலைபேசிகள் நன்கு அறியப்பட்ட கிடைத்தற்கரிய குறிப்புகளை வெளியிடம் ஐஸ் யுனிவர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியில் 8ஜிபி ரேம் எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இக்கருவியில் சாம்சங் நிறுவனத்தின் சொந்த 10என்எம் கட்டுமானத் தொழில்நுட்பம் பயன்படுத்தபப்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

ஃபிளாஷ் சேமிப்பு

ஃபிளாஷ் சேமிப்பு

மேலும் ஐஸ் யுனிவர்ஸ் பரிந்துரையின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவி நிறுவனத்தின் யூஎப்எஸ் (UFS) 2.1 ஃபிளாஷ் சேமிப்பு கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது. முந்தைய கசிவுகளின்படி இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வரும் வேண்டும் என்று பரிந்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே

சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே

இதற்கிடையில், கேலக்ஸி எஸ் தொடர் மற்றும் கேலக்ஸி நோட் தொடர் ஆகியவைகளுக்கு இடையே பொருந்தும் சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் கருவி சார்ந்த கசிவுகளை வெளியாகியுள்ளது. அதாவது இக்கருவியில் ஒரு 6-அங்குல சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே இடம் பெறலாம் என்று தென் கொரிய வெளியீடு (லீக்ஸ்) ஒன்று கூறுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே அளவு அதிகரிப்பானது சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் அக்கருவியின் அளவையும் கணிசமாக அதிகரிக்கும். உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எஸ்8 உடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மற்றும் கேலக்ஸி எஸ்8 ஆனது ஒரு 5 அங்குல டிஸ்ப்ளே கருவியாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரிக்கு முன்பே

பிப்ரவரிக்கு முன்பே

மேலுமொரு சமீபத்திய அறிக்கை சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் வெளியீடு 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது 2017 பிப்ரவரிக்கு முன்பே உலகம் முழுவதும் கிடைக்கப்பெறும் என்று கூறியுள்ளது.

எஸ்ஓசி

எஸ்ஓசி

மேலும் பல கசிவுகளின்படி கேலக்ஸி எஸ்8 கருவி ஒரு 'பீஸ்ட் மோட்' கருவியாக அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. மேலும் எதிர்வரும் கேலக்ஸி கருவிகளில் பாரிய 8ஜிபி தவிர்த்து எஸ்ஓசி (குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) செயல்திறனும் அதிகப்படுத்தபடலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

2017-ன் 'பிக்கஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்' எதிர்பார்ப்பு பட்டியல் .!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Earlier leaks suggestions of Samsung Galaxy S8 and S8 Plus. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot