ரியல்மி போன்களில் இனி அந்த அம்சம் வராது! திடீர் முடிவால் திணறும் யூசர்கள்!
ரியல்மி (Realme) போன்களின் கொடுக்கப்பட்ட முக்கிய அம்சம் குறித்து மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியதை அடுத்து அதற்கு விளக்கம் அளித்த, ரியல்மி நிறுவனம், "சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் உண்மையல்ல" என்றது. ஆனால், அந்த அம்சத்தை திடீரென்று புதிய அப்டேட் மூலம் நீக்கியிருக்கிறது
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது, மக்களிடையே பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. இதனால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களே, மலிவான விலையில் போன்களை களமிறக்கி, இந்திய மார்க்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த வரிசையில் ரியல்மி நிறுவனம், இந்தியாவில் 50 லட்சத்துக்கும் மேலான யூசர்களை வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய போன்களுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் காத்திருந்து வாங்கும் நிலையும் வந்துவிட்டது. இந்த சூழலில், அந்த நிறுவனத்தின் ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro Plus 5G) ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த போன்கள் விற்பனைக்கு வந்த ஒரு சில நாட்களேயே 1 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் காலியாகின. இந்தியாவில் விற்பனை சக்கைபோடு போடுவதால், ரியல்மி நிறுவனம் கொண்டாட்டத்தில் இருந்தது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு மிகப்பெரும் அதிர்ச்சி ஒரேவொரு ட்வீட் மூலம் காத்திருந்தது.
இந்த போன்களில், புதிதாக என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) என்னும் அம்சம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த அம்சம் எதற்கு பயன்படும் என்பதே யாருக்கும் தெரியவில்லை. இப்படி இருக்கையில், ரியல்மி போனை வாங்கிய ஒருவர் ட்விட்டரில் என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் அம்சம் மூலம், அந்த போனை பயன்படுத்துவோரின் லோகேஷன், காலண்டர் ஈவெண்டுகள், எஸ்எம்எஸ், கால்ஸ் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது, இந்த தகவல்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
அதோடு, இந்த அம்சம் முற்றிலும் தகவலை சேகரிக்க மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இதனை நிறுத்தவும், தொடங்கவும் யூசர்களுக்கு ஆப்சன் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த ட்வீட் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இப்போது, விஷயம் சீரியஸாகி விட்டதால், ரியல்மி யூசர்கள் சற்று கலக்கமடைய தொடங்கிவிட்டனர். இதனையறிந்த ரியல்மி நிறுவனம், வியாபாரம் படுத்துவிடுமோ என்று பயந்து, என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் குறித்து அவசரமாக விளக்கம் அளித்தது. அதில், ரியல்மி யூசர்களின் பிரைவசி மற்றும் செக்யூரிட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
இந்த என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் மூலம், யூசர்களின் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவே திட்டமிட்டோம். யூசர்கள் என்ன விரும்புகிறார்கள், வருங்காலத்தில் அவர்களுக்கு என்னென்ன அப்டேட்கள் தேவைப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள கொடுக்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இதனால் ரியல்மி யூசர்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில், இப்போது, அந்த அம்சத்தை ரியல்மி நிறுவனம் புதிய அப்டேட் கொடுத்து முற்றிலும் நீக்கியிருக்கிறது. இதுகுறித்து ரியல்மி தரப்பில், ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் (RMX3771_13.1.0.524(EX01) மற்றும் RMX3741_13.1.0.524(EX01)) அப்டேட் மூலம் என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் அம்சம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூசர்களின் தகவல்களை சேகரிக்கவில்லை என்றால், ஏன் அந்த அம்சம் நீக்கம் செய்யப்பட்டது என்று, இப்போது புதிய சர்ச்சையை ட்விட்டர் வாசிகள் கிளப்பி வருகின்றனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications