இன்று அறிமுகமாகும் இ-ருபி பணப் பரிவர்த்தனை வசதி.!

|

இ-ருபி எனும் ரசீது முறை பணப் பரிவர்த்தனை வசதியை பிரமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அதாவது பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் இ-ருபி என்ற புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

. பின்பு பணம் செலுத்த

வெளிவந்த தகவலின் அடிப்படையில், இந்த புதிய வசதி ஆனது இணையவழியில் முன்கூட்டியே பணத்தை செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். பின்பு பணம் செலுத்த வேண்டிய இடத்தில் அந்த ரசீது தொடர்பான விவரங்களை வழங்கினால் மட்டும் போதுமானதாகும். அதிலிருந்து பணம் பிடித்த செய்யப்பட்டுவிடும்.

 ரசீதை வாங்கும்

அதேபோல் அந்த ரசீதை வாங்கும் வாடிக்கையாளர்களுகு அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும், அந்த விவரங்கள் க்யூஆர் குறியீடாகவும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெய்வம்., பூமியை பிளந்தும் கொடுக்கும்- கிணறு தோண்டும்போது கிடைத்த அபூர்வ கல்- 510 கிலோ, ரூ.745 கோடி மதிப்பு!தெய்வம்., பூமியை பிளந்தும் கொடுக்கும்- கிணறு தோண்டும்போது கிடைத்த அபூர்வ கல்- 510 கிலோ, ரூ.745 கோடி மதிப்பு!

பணப் பரிவர்த்தனையை

குறிப்பாக இந்த வசதியானால் கடன் அட்டை, பற்று அட்டை போன்ற எதையும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இணையவழி பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு செல்லிடப்பேசி கட்டாயம் தேவைப்படும். இந்த புதிய வசதியில் செல்லிடப்பேசியைவைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது இ-ருபி மூலமாக வாங்கப்படும் ரசீதுகளின் விவரங்களை அறிந்திருந்தாலே பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டுவிட முடியும் என்பதே இதன் சிறப்பு.

வெள்ளப்பெருக்கிற்கு நடுவில் ஆன்லைன் கேமிங் விளையாடிய சிறுவர்கள்.. வைரலாகும் வீடியோ..வெள்ளப்பெருக்கிற்கு நடுவில் ஆன்லைன் கேமிங் விளையாடிய சிறுவர்கள்.. வைரலாகும் வீடியோ..

 இந்த ரசீதுகளைக் குறிப்பிட்

மேலும் இந்த ரசீதுகளைக் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக வாங்கிக் கொள்ள முடியும் என்றும். பின்பு குறிப்பிட்ட நபர்களுக்காக வாங்கி இத்தகைய ரசீதுகளை பரிசளிக்கவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வசதியாக இத்தகைய ரசீதுகள் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே மத்திய அரசுகூறியுள்ளது.

கூகுள் அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்- இனி ரொம்ப எளிதாக வீடியோ கால் செய்யலாம்!கூகுள் அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்- இனி ரொம்ப எளிதாக வீடியோ கால் செய்யலாம்!

 சொல்ல வேண்டும் என்றால், இ

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இதன் மூலமாக தனியார் மருத்துவமனகைளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தேவையான கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீது விவரங்களை மற்ற நபர்களுக்கு பரிசாக அளிக்க முடியும். பின்பு இ-ருபி வசதி இணையவழி பணப்
பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

பீம் செயலி

யுபிஐ என்ற இணையவழி பணப் பரிவத்தனை, பீம் செயலி போன்று இந்த இ-ருபி வசதியும் கண்டிப்பாக அதிக வரவேறப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.!ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.!

 கனரா வங்கி, பரோடா வங்கி, ஐசிஐ

எஸ்பிஐ, கனரா வங்கி, பரோடா வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் போன்ற வங்கிகள் இந்த இ-ருபி வசதியை நடைமுறைப்படுத்தவதற்கான திட்டத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
e-Ruby will be introduced by Prime Minister Modi today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X