மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு அவசியம்.! விண்ணப்பிப்பது எப்படி? முழுவிவரம்.!

|

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை காரணமாக வரும் மே 24-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அறிவிப்பிற்குப் பிறகு மாநிலத்தில் ஒரளவு வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது, ஆனாலும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை.

 ஊரடங்கும், ம

இந்நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வதற்கு இ-பதிவு இன்று முதல்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத ஊரடங்கும், மற்ற நாட்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால்

தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே காலை 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.!செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.!

முறை இன்று (17.05.2021) முதல்

இந்த நிலையில் இ-பதிவு முறை இன்று (17.05.2021) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மாவட்டங்களுக்கு உள்ளேமற்றும் வெளியில் பயணம் செய்வோர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ-பதிவு செய்வது கட்டாயம் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.

 இ-பதிவு

எனவே அத்தியாவசிய பணிகாளன மருத்துவ சிகிச்சை, இறப்பு, திருமணம்,முதியோர்களுக்கான தேவை, நேர்காணல் போன்ற சில தேவைகளுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இ-பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பதிவை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்.! நம்பி வாங்கலாமாபட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்.! நம்பி வாங்கலாமா

ம், முதியோர் பராமரிப்பு, இறப்பு,

மேலும் இந்த https://eregister.tnega.org இணையதளத்தில் உங்களது செல்போன் எண்ணை கொடுத்து, பாஸ்வேர்டைபதிவு செய்துஉள்நுழைய வேண்டும். பின்பு வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள்? அல்லது மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு நடுவில் மற்றும்மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் தனிநபர்கள் மற்றும் தொழிற்பிரிவினர் மேற்கொள்ளும் பயணப் பதிவுகள்? என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதில் அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு, திருமணம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவண ஆதரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 3 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி என்று

இ-பதிவு மூலம் மக்கள் தங்களது அத்தியாவசிய பணியை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பின்பு இருசக்கர வாகனத்தில் ஒருவரும், காரில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னாகும்? முழு விவரம்.!வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னாகும்? முழு விவரம்.!

லையின்போது கொரோனா

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவியகொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
E-registration required to travel between districts! How to apply: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X