புது E-passport வந்தது.. பழைய Passport கதியென்ன.. இனி எப்படி அப்ளை செய்வது.. புது Passport எப்படி கிடைக்கும்?
மத்திய அரசின் கீழ் செயல்படும் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாமல், மேலும் 12 நகரங்களில் ஈ-பாஸ்போர்ட் (E-passport) சேவையை தொடங்கி இருக்கிறது. இந்த புதிய ஈ-பாஸ்போர்ட் வந்துவிட்டதால், பழைய பாஸ்போர்ட் என்னவாகும்? அவர்கள் ஈ-பாஸ்போர்ட்டுக்கு மாற வேண்டுமா? ஈ-பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளது. இதுகுறித்த ஒட்டுமொத்த விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஈ-பாஸ்போர்ட் என்பது பைலைட் பேஸ் (Pilot Phase) முறையில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட சோதனை முயற்சி போலத்தான். ஆகவே, பழைய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேரும் ஈ-பாஸ்போர்ட்டுக்கு மாற வேண்டிய அவசியம் கிடையாது. இப்போது வைத்திருக்கும் பாஸ்போர்ட்டின் காலாவதி தேதி (Expiry Date) முடியும் வரையில் பயன்படுத்தலாம்.

புதிதாக அப்ளை செய்யும்போது மட்டுமே நேரடியாக ஈ-பாஸ்போர்ட் பெற்று கொள்ள முடியும். அதுவும், இந்த ஈ-பாஸ்போர்ட்டின் பைலைட் பேஸ் நடக்கும் நகரங்களில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும். அதாவது, தமிழ்நாட்டின் சென்னை உள்பட ஹைதராபாத், அமிர்தசரஸ், புவனேஸ்வர், டெல்லி மற்றும் கோவாவில் இந்த சேவை கிடைக்கிறது.
அதேபோல ராஞ்சி, ஜெய்ப்பூர், ஜம்மு, நாக்பூர் மற்றும் ராய்ப்பூர் நகரங்களிலும் இந்த சேவை கிடைக்கிறது. ஆகவே, இந்த நகரங்களில் புதிதாக பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யும் நபர்களுக்கு நேரடியாக ஈ-பாஸ்போர்ட் வழங்கப்படும். ஆகவே, அங்கு பழைய பாஸ்போர்ட் வைத்திருந்தால், அதன் காலாவதி தேதி முடியும் வரையில் பயன்படுத்துங்கள்.
அதற்கு பிறகு ஈ-பாஸ்போர்ட்டுக்கு மாறினால் போதும். இந்த 13 நகரங்கள் வரும் காலங்களில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இந்தியாவில் இருக்கும் அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் கூடிய விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவை வர இருக்கிறது. இந்த நேரத்தில் ஈ-பாஸ்போர்ட்க்கு அப்ளை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
ஈ-பாஸ்போர்ட்க்கு அப்ளை செய்வது எப்படி? இது வழக்கமாக பின்பற்றும் பாஸ்போர்ட் அப்ளை போலத்தான் இருக்கிறது. இதுவரையில் அப்ளை செய்யும்போது பின்பற்றிய அதே படிநிலைகளே இப்போதும் இருக்கிறது. ஆகவே, பாஸ்போர்ட் சேவா (Passport Seva) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். அதில் கேட்கப்படும் விவரங்களை கொடுத்து, கட்டணங்களை செலுத்துங்கள்.
இப்போது, உங்களது பகுதியில் இருக்கும் பாஸ்போர்ட் சேவை மையம் (Passport Seva Kendra) அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் (Post Office Passport Seva Kendra) அப்பாயிண்ட்மெண்ட்டை புக் செய்ய வேண்டும். இந்த அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் நேரடியாக நீங்கள் செல்ல வேண்டும். அப்போது, உங்களது பயோமெட்ரிக் விவரஙகள் பதிவு செய்யப்படும்.
அதேபோல போட்டோகிராப், ஃபிங்கர்பிரிண்ட் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்து கொள்ளப்படும். அதன்பிறகு நடக்கும் வெரிபிகேஷன் போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு உங்களுக்கு ஈ-பாஸ்போர்ட் வழங்கப்படும். அதுவே நீங்கள் மேற்கண்ட 13 நகரங்களில் இல்லையென்றால், உங்களுக்கு வழக்கமாக கிடைக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படலாம்.
ஆகவே, பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்திய மட்டுமல்லாமல், எந்தெந்த நாடுகளில் ஈ-பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தியர்கள் அதிகம் செல்லும் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், யுஎஸ்ஏ, யுகே, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஈ-பாஸ்போர்ட் கிடைக்கிறது.
அவ்வளவு ஏன்? பாகிஸ்தான், வங்க தேசம், நேபால் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளும் ஈ-பாஸ்போர்ட் வழங்குகின்றன. ஆகவே, ஈ-பாஸ்போர்ட் பெறும் இந்தியர்களுக்கு இதுபோன்ற நாடுகளில் எளிதாக வெரிபிகேஷன்கள் இருக்கும். அதேபோல விரைவாக இமிகிரேஷனை முடித்து கொள்ள முடியும். சிப்-மூலம் வழங்கப்படுவதால் பாதுகாப்பும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








