மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வேண்டும்.! புதிய அறிவிப்பு.!

|

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

தொற்று இருப்பவர்களுடன்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழுவுட

மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கும் என மத்திய உள்துறை அறிவித்த நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழுவுடன் முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி அன்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசானை கூட்டத்திற்கு பி

ஆலோசானை கூட்டத்திற்கு பிறகு முதலவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தகவல் என்னவென்றால், தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்டும் எனவும் அறிவித்துள்ளார்.

பூமியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 151 பூச்சி இனம்! இதில் 5 பூச்சியின் பெயரே வித்யாசம்!பூமியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 151 பூச்சி இனம்! இதில் 5 பூச்சியின் பெயரே வித்யாசம்!

இ-பாஸ் நடைமுறை தொடரும். பின்பு ஏற்கனவே

குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும். பின்பு ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 7மணி வரை இயங்கலாம் எனவம், பேரூராட்சி,

மேலும் வெளிவந்த தகவலின்படி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 7மணி வரை இயங்கலாம் எனவம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் 10000 ரூபாய்க்குள் வருமானம் உள்ள கோவில்களை திறக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்: ஆன்லைனில் வெளியான சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்!நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்: ஆன்லைனில் வெளியான சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்!

பேருந்து மற்றும்

பின்பு ஆகஸ்ட் மாதத்திலும் பேருந்து மற்றும் ரெயில்கள் ஓடாது எனவும், அத்தியவசிய மற்றும் அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
e-Pass Procedure Will Be Continued As Same For From District To District Travelling: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X