நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்: இ-பாஸ் வாங்குவது எப்படி? இதோ முழு விவரம்.!
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவின் முதல் அலை
கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவதால்
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டயாம் என்று அரசு நேற்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும் புதிய காட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை (ஏப்ரல் 10) முதல் அமலுக்கு வருகின்றன. எனவே இதையொட்டி மாநில எல்லைகளில் போலீஸாரை குவித்து தீவிர வாகன சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கட்டாயம் இ-பாஸ்
அரசு வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும். அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை கூறினாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இ-பாஸ் எடுக்கும் முறை
கடந்த ஆண்டு எந்த மாதிரி நடைமுறை இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இ-பாஸ் எடுக்கும் முறை இருக்கிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி https://eregister.tnega.org/#/user/pass வலைத்தளம் மூலம் தான் இ-பாஸ் வாங்க முடியும். இந்த வலைத்தளத்தில் உங்களது மொபைல் நம்பர் பதிவு செய்தால் ஓடிபி நம்பர் வரும், அதை வைத்து உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும்.

குறிப்பாக தனிநபர் அல்லது குழுவாக சாலை வழிப்பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி விருப்பம் உள்ளது. பின்பு ரயில் அல்லது விமானம் போன்றவற்றின் மூலமாக தமிழகம் வருவதாக இருந்தால் அதற்கும் ஒரு விருப்பம் உள்ளது. உங்களுக்கு தேவையான விருப்பத்தை தேர்வு செய்து அதற்கு தகுந்த தகவல்களை கொடுக்க வேண்டும்.

ஒருவேளை அந்த வலைத்தளத்தில் நீங்கள் சாலை வழிப்பயணம் விருப்பத்தை தேர்வு செய்தால் மருத்துவ அவசரம், இறப்பு, அரசு டெண்டர் விவகாரம், திருமணம், சொத்து பதிவு, சுற்றுலா, அரசுப் பணிகளை மேற்பார்வை செய்தல், உள்ளிட்ட பணி நிமித்தமாக வருதல்போன்ற காரணங்கள் அதில் இருக்கும். எனவே இந்த காரணங்களை கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர முடியும். இதில் எதுவும் இல்லையென்றாலும் கூட பிற காரணங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும், அதை கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் இந்த வலைத்தளத்தில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட எதாவது ஒன்றை கொடுத்து உங்களது அடையாள சான்று சமர்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எந்த மாதிரி வாகனம், வாகனத்தின் பதிவு எண்
போன்றவற்றையும் அதில் தெரிவிக்க வேண்டும். பின்பு கூடுதல் தகவல்களை கொடுக்கவும் அதில் விருப்பம் ஒன்று உள்ளது.


Click it and Unblock the Notifications