Home
News

ஆதார் அட்டையில் இனி பிறந்த தேதி, பெயர், முகவரியை மாற்ற சிரமம் இருக்காது.. வருகிறது e-Aadhaar செயலி..

இந்தியாவில் அனைத்து முக்கிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் (Aadhaar) கார்டு தேவைப்படுகிறது. குறிப்பாக இப்போது பிறந்த தேதி, பெயர் அல்லது முகவரி போன்ற விவரங்களை மாற்ற, மக்கள் ஆதார் மையத்திற்கு நேரில் சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இது அதிக நேரத்தையும் செலவையும் அதிகரிப்பதோடு, ஒரு சவாலான பணியாகவும் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு கூடிய விரைவில் e-Aadhaar எனும் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இதன் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போனில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலிருந்தபடியே ஆதாரில் முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி மற்றும் பிற புள்ளி விவர தகவல்களை எளிதில் மாற்ற முடியும். இனி சிறு மாற்றங்களுக்காக ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

ஆதார் அட்டையில் இனி பெயர், முகவரியை மாற்ற சிரமம் இருக்காது..

அதுவும் இ-ஆதார் செயலி ஆனது ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவமாகச் செயல்படும். இதன் மூலம், உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றலாம். மேலும், தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் அட்டையை டிஜிட்டல் முறையில் பகிரவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இ-ஆதார் செயலி மூலம் எந்தவொரு அப்டேட்டும் உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். அதாவது இதில் பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் போன்ற தகவலை மாற்றலாம். சிங்கிள் டிஜிட்டல் இன்டர்பேஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இ-ஆதார் மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பிறந்த தேதி, போன் நம்பர், முகவரி போன்றவற்றைப் பயனர்களே மாற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால் கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும். அதேசமயம் இந்த டிஜிட்டல் ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும், எங்கும் பகிரலாம். பின்பு மக்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழி பதிவுகளைப் புதுப்பிக்க மட்டுமே ஆதார் செண்டர் செல்ல தேவை இருக்கும் மற்ற எந்த வித அப்தேஷனுக்கு இ-ஆதார் மொபைல் செயலி பயன்படுத்துவதன் மூலம் இதை எளிதாகச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், மின்சாரக் கட்டண ரசீதுகள் போன்ற ஆவணங்களை இந்த ஆதார் செயலியே தானாப் பெற்றுச் சரிபார்க்கும். எனவே இது சரிபார்ப்பு நடைமுறைகளை மிகவும் எளிதாக்கும்.

இந்த இ-ஆதார் ஆப் ஆனது செயற்கை நுண்ணறிவு (AI), முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். பின்பு ஆதார் சரிபார்ப்பு செயல்முறைகளை வேகப்படுத்தும். இதனால், பல நாட்கள் எடுக்கும் அரசு சேவைகளை சில நிமிடங்களில் முடிக்க முடியும்.

ஆதார் அட்டையில் இனி பெயர், முகவரியை மாற்ற சிரமம் இருக்காது..

குறிப்பாக UIDAI இந்த மொபைல் செயலியை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஆதார் கார்டு அப்டேட் சேவையை காகிதமற்றதாக மாற்றுவதாகும். பின்பு டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கவும், மக்கள் இ-சேவை மையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தான் இந்த புதிய ஆப் உருவாக்கப்படுகிறது.

மேலும் இந்த செயலி மூலம் ஆதார் அப்டேட் செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், ஆதார் அப்டேட் முறையை விரைவில் செய்ய முடியும். ஆதார் கார்டு தகவல் லீக் தொடர்பான அபாயங்களைக் குறைக்க இது உதவுகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் இந்த புதிய ஆதார் கார்டு செயலி வெளியிடப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
E-Aadhaar app to launch soon in India: Instantly update your date of birth, address and phone number
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X