Aadhaar அப்டேட்.. இனிமே எங்கும் அலைய வேண்டாம்.. வருகிறது புதிய செயலி.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் அனைத்து முக்கிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் (Aadhaar) கார்டு தேவைப்படுகிறது. இந்நிலையில் அதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஆதார் (E-Aadhaar) என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக இதன் மூலம் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல் தங்கள் ஸ்மார்ட்போனிலேயே ஆதார் சேவைகளைப் பெற முடியும்.
குறிப்பாக இ-ஆதார் செயலி இந்த 2025 ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இ-ஆதார் செயலி ஆனது ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவமாகச் செயல்படும். இதன் மூலம், உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றலாம். மேலும், தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் அட்டையை டிஜிட்டல் முறையில் பகிரவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவாக கூறவேண்டும் என்றால் இ-ஆதார் செயலி மூலம் எந்தவொரு அப்டேட்டும் உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். அதாவது இதில் பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் போன்ற தகவலை மாற்றலாம். சிங்கிள் டிஜிட்டல் இன்டர்பேஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இ-ஆதார் மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் பிறந்த தேதி, போன் நம்பர், முகவரி போன்றவற்றைப் பயனர்களே மாற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால் கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும். அதேசமயம் இந்த டிஜிட்டல் ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும், எங்கும் பகிரலாம். பின்பு மக்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழி பதிவுகளைப் புதுப்பிக்க மட்டுமே ஆதார் செண்டர் செல்ல தேவை இருக்கும் மற்ற எந்த வித அப்தேஷனுக்கு இ-ஆதார் மொபைல் செயலி பயன்படுத்துவதன் மூலம் இதை எளிதாகச் செய்யலாம்.
குறிப்பாக பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், மின்சாரக் கட்டண ரசீதுகள் போன்ற ஆவணங்களை இந்த செயலியே தானாப் பெற்றுச் சரிபார்க்கும் வசதி உள்ளது. எனவே இது சரிபார்ப்பு நடைமுறைகளை எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இ-ஆதார் ஆப் ஆனது செயற்கை நுண்ணறிவு (AI), முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். பின்பு ஆதார் சரிபார்ப்பு செயல்முறைகளை வேகப்படுத்தும். இதனால், பல நாட்கள் எடுக்கும் அரசு சேவைகளை சில நிமிடங்களில் முடிக்க முடியும். அதேபோல் இந்த புதிய செயலியின் சோதனைப் பதிப்பு (early-access) கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை பதிவிறக்கம் செய்து, தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து அடிப்படை அம்சங்களை முயற்சி செய்யலாம்.

UIDAI இந்த மொபைல் செயலியை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஆதார் கார்டு அப்டேட் சேவையை காகிதமற்றதாக மாற்றுவதாகும். பின்பு டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கவும், மக்கள் இ-சேவை மையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தான் இந்த புதிய ஆப் உருவாக்கப்படுகிறது. இந்த செயலி மூலம் ஆதார் அப்டேட் செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், ஆதார் அப்டேட் முறையை விரைவில் செய்ய முடியும். ஆதார் கார்டு தகவல் லீக் தொடர்பான அபாயங்களைக் குறைக்க இது உதவுகிறது.
ஏற்கனவே கூறியபடி முழுமையான இ-ஆதார் செயலி இந்த ஆண்டின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய செயலி வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








