Dyson Zone headphones: ஒரே கல்லுல 2 மாங்கா மாதிரி.. ஒரே டிவைஸில் ஏர்பியூரிஃபையர் + ஹெட்போன்ஸ்! விலை என்ன?
இந்த ஹை-டெக் தொழில்நுட்ப காலத்தில் புதுமைக்கு பஞ்சமே இல்லை. புதுமை என்றாலே அது உலகவில் வெகு வேகமாக பிரபலமடைந்துவிடும். அப்படியான ஒரு புதுமை சாதனம் தான் இந்த டைசன் ஜோன் ஹெட்போன்ஸ் (Dyson Zone headphones) சாதனமாகும்.
இப்படி ஒரு ஹெட்போன்ஸ் (Headphones) + ஏர் பியூரிபையர் (Air purifier) இணைந்து செயல்படும் அட்வான்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு ஹெட்போன்ஸ் சாதனத்தை நீங்கள் இதற்கு முன் எங்கும் பார்த்திருக்க முடியாது. டைசன் (Dyson) நிறுவனம் தனது முதல் ஏர் பியூரிபையர் உடன் இயங்கும் ஹெட்ஃபோன்ஸ் மாடலை அறிவித்துள்ளது. இதை நிறுவனம் டைசன் ஜோன் ஹெட்போன்ஸ் (Dyson Zone headphones) என்று அழைக்கிறது.

இந்த Dyson Zone ஹெட்போன்ஸ் ஒரு ஆடியோ சாதனம் மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் தூசி துகள்களையும் பில்டர் செய்து உங்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்க வழங்கும் ஏர் பியூரிபையராகவும் (Air purifier) செயல்படுகிறது. சுருக்கமாக சொன்னால், Dyson Zone ஹெட்ஃபோன்கள் அதனுடன் இணைக்கப்பட்ட ஏர் பில்டர்களுடன் (Air filter) வருகின்றன. இது ஒரு வித்தியாசமான வடிவமைப்பு.
எந்தவொரு ஆடியோ பிராண்டிலும் இதுபோன்ற தயாரிப்பை முயற்சிக்காததால், இந்த சாதனம் தொழில்நுட்ப துறையில் முதன்மையானதாகத் திகழ்கிறது. ஏர் பில்டர் உடன் கூடிய இந்த ஹெட்ஃபோன்கள் வாங்குவதற்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை Dyson இப்போது வெளிப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி விபரங்களை இப்போது பார்க்கலாம்.
முதலில் இந்த சாதனம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இப்போது இந்த சாதனம் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, இது விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் அமெரிக்க சந்தையில் $949 டாலர் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.77,626 என்ற விலையில் வருகிறது.

இதன் அம்சங்களை பற்றி பேசுகையில், Dyson Zone ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation) மற்றும் ஏர் பியூரிஃபையர் அம்சத்துடன் வருகிறது. இது குறிப்பாக நகர்ப்புற நாய்ஸ் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாட்டின் இரட்டை சவால்களை சமாளிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் 11 மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டிருப்பதாக நிறுவனம் வெளிப்படுத்துகிறது. ANC அமைப்பு, நகரின் ஒலியை 40 dB வரை குறைக்க, எட்டு அமைப்பு பயன்படுத்துகிறது.
இந்த ஹெட்ஃபோன்களைப் பற்றிய சிறந்த அம்சம் இதில் இருக்கும் ஏர் பில்டர்கள் தான் - இது எல்லா வகையான சூழ்நிலைகளிலும் சிறப்பாக வேலை செய்கிறது மற்றும் பயணத்தின்போது உங்களைப் பாதுகாக்கிறது; இந்த பில்டர்கள் 12 மாதம் வரை தரமான செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதற்கு பிறகு ஏர் பில்டரை மட்டும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். எலெக்ட்ரோஸ்டேடிக் பில்டர்கள் மூலம் 99% துகள் மாசுபாட்டை 0.1 மைக்ரான் 2 வரை கைப்பற்றுகின்றன.
இது 2,600mah பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒருமுறை முழு சார்ஜ் செய்தால், 50 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாக கூறப்படுகிறது. இதன் ஏர் பில்டர் மோட் உடன் இயங்கும் போது, லோ-லெவலில் 4 மணிநேரமும், மீடியம் மோட் இல் 2.5 மணிநேரமும், ஹை-லெவலில் 1.5 மணிநேரமும் நீடிக்கும் வகையில் இந்த சாதனம் செயல்படுகிறது. Dyson Zone அமெரிக்காவில் இப்போது வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications