சோனி கூட இப்படி யோசிக்கல.. வித்யாசமான ஹெட்போன்ஸ் இந்தியாவில் விற்பனை.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..
பார்ப்பதற்கே விதியசமாக காட்சியளிக்கும் இந்த சாதனம் ஒரு ஹெல்மெட் அல்லது மாஸ்க் போல சிலருக்கு தோன்றினாலும், இதுவொரு புது வகையான ஹெட்போன்ஸ் என்பதே உண்மையாகும். டைசன் (Dyson) நிறுவனம் புதிதாக டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன்ஸ் (Dyson Zone Air Purifying ANC Headphones) என்ற இந்த விதியசமான சாதனத்தை நிறுவனம் இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. பல நாடுகளில் வெளியிடப்பட்ட பிறகு, டைசன் நிறுவனம் இறுதியாக அதன் டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன்களை இந்திய சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த பிரீமியம் ஹெட்ஃபோன்ஸ் சாதனம் ஒரே நேரத்தில் 2 சாதனமாக செயல்படுகிறது. இது காதுகளுக்கு ஆடியோவை வழங்கும் ஹெட்போன்ஸ் சாதனமாகவும், மறுபுறம் உங்கள் சுவாசத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட காற்றை வழங்கும் ஏர் பில்டர் சாதனமாகவும் செயல்படுகிறது. இதில் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள், நீண்ட பேட்டரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்க உதவும் ஒரு வைசர் ஏர் பில்டர் போன்றவை உள்ளது.
டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன்ஸ் பொதுவான நகர மாசுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களிலிருந்து காற்றைச் சுத்தம் செய்ய இரட்டை சுத்திகரிப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் போது, நீங்கள் இசை அல்லது பாட்காஸ்ட்களை ரசிக்கும் போது, உங்கள் மூக்கு மற்றும் வாய்க்கு சுத்தமான காற்றை அனுப்பும் சிறப்பு முகமூடியுடன் இது வருகின்றது.
டெல்லி, மும்பை போன்ற பகுதிகளில் காற்றின் மாசு மிகவும் மோசமாக இருப்பதனால், இத்தகைய சாதனம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஹெட்ஃபோன்கள் மூன்று-வேக ஏர்ஃப்ளோ பயன்முறையைக் கொண்டுள்ளன. இது நீங்கள் எவ்வளவு வேகமாக நகர்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, தானாகவே காற்றின் வேகத்தை இந்த சாதனம் சரிசெய்கிறது. உள்ளமைக்கப்பட்ட சென்சார் மூலம் இது நிகழ்கிறது.

இது எப்போதும் சுத்தமான காற்றைப் பெறுவதை உறுதி செய்கிறது. டைசன் நிலைத்தன்மையைப் பற்றி அக்கறை கொள்கிறது. மேலும் ஹெட்ஃபோன்கள் ஒரு எலக்ட்ரானிக் பில்டரை கொண்டுள்ளன. அது ஒரு வருடம் வரை நீடிக்கும் திறன் கொண்டது. இந்த பில்டர் 99% துகள்களைப் பிடிக்கிறது. உண்மையில் 0.1 மைக்ரான் அளவுக்கு சிறிய வகை துகள்களை கூட, இது பில்டர் செய்கிறது.
நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற அமில வாயுக்களையும் பில்டர் செய்கிறது.
டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன்ஸ் வெளிப்புற நாய்ஸ் அல்லது சத்தத்தைக் குறைப்பதில் சிறந்தவை. இவை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) தொழில்நுட்பம் மற்றும் பேசிவ் நான்ஸ் ரிடக்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
இவை சத்தத்தை 40 dB குறைக்கும். ஒலியின் தரமும் நன்றாக உள்ளது. ஒலியை தெளிவாக வைத்திருக்க ஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளது. அவர்கள் புளூடூத் 5.0 ஐப் பயன்படுத்தி உங்கள் சாதனங்களுடன் இணைக்க முடியும். இந்த ஹெட்ஃபோன்களின் பேட்டரி ஆயுள் மற்றொரு பலம். ஏனெனில், இது ஒரு பெரிய 2600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணிநேரம் வரை நீடிக்கும்.
ஆனால், ஏர் பில்டரை பயன்படுத்துவது பேட்டரி ஆயுளைப் பாதிக்கும். குறைந்த அமைப்பில், இது உங்களுக்கு 4 மணிநேரமும், நடுத்தரத்தில் 2.5 மணிநேரமும், அதிக வேகத்தில் 1.5 மணிநேரமும் நீடித்து இயங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன் இந்தியாவில் ரூ. 59,900 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இவை Dyson.in மற்றும் Dyson Demo கடைகளில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








