ChatGPT பயன்படுத்த தடை.. 2 முக்கிய காரணங்களை முன் வைத்து Apple நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
சாம்சங் (Samsung), கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), ஜேபி மோர்கன் (JP Morgan) மற்றும் சில நிறுவனங்களுக்கு பிறகு, ஆப்பிள் (Apple) நிறுவனமும் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற ஜெனரேட்டிவ் ஏஐ டூல்களை (Generative AI Tool) பயன்படுத்த தனது ஊழியர்களுக்கு தடை விதித்துள்ளது.
ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி உடன் சேர்த்து கூகுள் பார்ட் (Google Bard) மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் (Microsoft Bing) போன்ற ஏஐ சாட்போட்களை (AI Chatbot) பயன்படுத்துவதையும் ஆப்பிள் நிறுவனம் தடை செய்துள்ளது. ஆப்பிளின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பின்னால் 2 முக்கிய காரணங்கள் உள்ளன.

முதல் காரணம் - சாட்ஜிபிடி, பார்ட், பிங் போன்ற ஏஐ சாட்பாட்களை பயன்படுத்தும் போது தற்செயலாக, ஆப்பிள் நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் (Apple's Confidential information) அம்பலப்படுத்தப்படலாம். இதற்காகத்தான் மென்பொருள் குறியீட்டை (Software code) எழுதுவதை தானியங்குபடுத்தும் கருவியான மைக்ரோசாப்டின் கோபைலட்டை (Microsoft's Copilot) கூட பயன்படுத்த வேண்டாம் என்று ஆப்பிள் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த அச்சத்திற்கு காரணம் சாட்ஜிபிடி மற்றும் பிற சாட்பாட்கள் ஆனது பயிற்சி பெறுவதற்காக சுமார் நூறு மில்லியன் பயனர்களின் தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்கிற தகவலே ஆகும். நினைவூட்டும் வண்ணம், கடந்த மார்ச் மாதத்தில், சாட்ஜிபிடி-யில் ஏற்பட்ட ஒரு பக் (Bug) காரணமாக சில பயனர்கள் மற்றொரு பயனரின் சாட் ஹிஸ்டரியில் இருந்து டைட்டில்களை (Titles from another user's chat history) பார்த்தனர்.
இத்தாலியில், சாட்ஜிபிடி தடை (Ban) செய்யப்பட்ட பின்னர் மற்றும் அதன் டேட்டா ப்ரைவஸி வழிகாட்டுதல்கள் (Data privacy guidelines) மீது சந்தேகம் அதிகரித்த பின்னர், சாட் ஹிஸ்டரியை டிஸேபிள் செய்யும் ஒரு விருப்பம் (Disable Chat History) அறிமுகமானது. இது மற்ற பயனர்களின் தரவுகளில் இருந்து பயிற்சி பெறுவதை தடுப்பதாக கூறப்படுக்கிறது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனத்திற்கு இது போதுமான பாதுகாப்பாக தெரியவில்லை போலும்.
ஆப்பிளுக்கு முன்னதாக பாதுகாப்பு அபாயங்களின் (Security risks) காரணமாக, சாம்சங் நிறுவனம் சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்களை பபயன்படுத்த தனது ஊழியர்களுக்கு தடை விதித்து இருந்தது. சில சாம்சங் ஊழியர்கள் உதவி பெறும் நோக்கத்தின் கீழ், சாட்ஜிபிடி-யிடம் சோர்ஸ் கோட்-ஐ (Source Code) வழங்கிய பிறகு சாம்சங் இந்த முடிவுக்கு வந்தது.
இதேபோல அமேசான் (Amazon) நிறுவனம், கோடிங் தொடர்பான உதவிக்கு (Coding assistance) சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்களுக்கு பதிலாக நிறுவனத்தின் இன்டர்னல் ஏஐ டூலை (Internal AI Tool) பயன்படுத்துமாறு அதன் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் சாட்ஜிபிடி-ஐ தடை செய்ய இன்னொரு காரணமும் உள்ளது.
அது என்னவென்றால் - ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த லேங்குவேஜ் மாடல்களை (Language Models) உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது, அதாவது ஆப்பிள் தன்னுடைய சொந்த ஏஐ டூலை உருவாக்கி வருகிறது. இதற்காக கூகுளின் முன்னாள் பணியாளரான ஜான் ஜியானன்ட்ரியா (John Giannandrea), ஆப்பிளின் ஏஐ முயற்சிக்கான மூத்த துணைத் தலைவராக (Senior vice president ) பணியாற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications








