ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.!

|

அபுதாபியை சேர்நத் முபதாலா முதலீட்டு நிறுவனம் தங்களுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மகளில் 9,093கோடியை முதலீடு செய்ய இருப்பாதக ரிலையன்ஸ் நிறுவனம் அன்மையில் தகவல் தெரிவித்துள்ளது.

 முதலீட்டின் மூலம்

மேலும் இந்த முதலீட்டின் மூலம் கடந்த ஆறு வாரங்களுக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து ஜியோ பெற்றுள்ள முதலீடுகளின் மதிப்பு 87,655 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி

இதுவரை பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ்,ஜெனரல் அட்லாண்டிக், கே.கே ஆர் உள்ளிட்டஅட்டகாசநிறுவனங்கள்ரிலையன்ஸுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்துள்ளன.

பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள்! 2020 இன்னும் மோசமாகுமா? இதனால் ஆபத்தா?பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள்! 2020 இன்னும் மோசமாகுமா? இதனால் ஆபத்தா?

 பிளாட்ஃபார்மில் 1.85சதவிகிதம் பங்குகளை வாங்கும்

இப்போது ஜியோ பிளாட்ஃபார்மில் 1.85சதவிகிதம் பங்குகளை வாங்கும் முபதாலாவின் முதலீட்டின் பங்கு மதிப்பு 4.91லட்சம்கோடி ரூபாய் என்றும் நிறுவன மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாய் என்றும் ரிலையனஸ் ஜியோ நிறுவனம் தகவல்
தெரிவித்துள்ளது.

டாலர் அளவுக்கு முதலீடு

அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயலபடும் முபதாலா நிறுவனம் ஆனது பல்வேறு நாடுகளில் விண்வெளி,தகவல் தொழில்நுட்பம், உலோகங்கள், சுரங்கங்கள் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி, குறைக்கடத்திகள், எண்ணெய் மற்றும் எரிவாயு,சுகாதாரம், ரியல் எஸ்டேட், மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சுமார் 299பில்லியன் டாலர் அளவுக்குமுதலீடு செய்துள்ளது.

ஜியோ தலைவரும் நிர்வாக

ஜியோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜியோ தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி இந்தியாவை இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி தேசமாக மாற்றுவதற்கான பயணத்தில் உலகளாவிய வளர்ச்சி முதலீட்டாளர்களில் ஒருவரான முபதாலா கூட்டு சேர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி பயணங்களை

மேலும் முபதாலாவின் அனுபவம் மற்றும் உலகெங்கிலும் உள்ள வளர்ச்சி பயணங்களை ஆதரிப்பதன் நுண்ணறிவு போன்றவற்றிலிருந்து பயனடைய நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

முன்பு ஜியோ நிறுவனத்தின் 5,700கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 9.9சதவிகிதம் பங்குகளை சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் வாங்கியது. இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களிலேயே அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ள பங்குதாரராக பேஸ்புக் நிறுவனம் உருவெடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Dubai Munadala Company Invests Rs. 9,093 Crore In Reliance Jio: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X