நீ பொட்டு வச்ச தங்க குடம்.. Vodafone 5G அறிமுக தேதி இதுதான்.. Vi சிம் கார்ட்டை தூசி தட்றா.. கஸ்டமர்கள் குஷி!
பான் இந்தியா அடிப்படையிலான.. அதாவது இந்தியா முழுவதுமான 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யாத பிஎஸ்என்எல் கூட அதன் 5ஜி சேவைகள் ஆனது ஜூன் 2025 இல் அறிமுகம் செய்யவதற்கான திட்டத்தை கொண்டுள்ளது. ஆனால் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய 2 ஜாம்பவான்களுக்கு மத்தியில் "போட்டிபோட்டு வந்த" வோடாபோன் ஐடியா நிறுவனமோ அதன் 5ஜி அறிமுகம் குறித்து வாயே திறக்கவில்லை.
இந்த இடைவெளியில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டன. பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி நெட்வொர்க் வழியாக 5ஜி நெட்வொர்க்கை "உடனே" அப்கிரேட் செய்யும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதால், பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகமான வேகத்தில் (ஒரு சில மாதங்களில்) பிஎஸ்என்எல் 5ஜி-யும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆக ஒட்டுமொத்தமாக - இந்திய டெலிகாம் துறையில், வோடாபோன் ஐடியா நிறுவனம் மட்டுமே எந்த ஐடியாவும் இல்லாமல்.. எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாமல்.. இருப்பதை வைத்து வண்டி ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனமான இருக்கிறது. இதற்கிடையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் எப்போது தனது 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யும்? இதற்காக அந்நிறுவனம் கையாள உள்ள டூயல் ஸ்ட்ரேடஜி (Dual strategy) குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
வோடபோன் ஐடியா 5ஜி (Vodafone Idea 5G) நெட்வொர்க் எப்போது அறிமுகமாகும்? இந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அதன் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம் செய்யப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே விஐ 5ஜி அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. 4ஜி அறிமுகத்திற்கு பின்னர் ஜியோ, ஏர்டெல்லிடம் வாடிக்கையாளர்களை இழந்தது போல 5ஜி அறிமுகத்தில் நடக்க கூடாது என்று விஐ நிறுவனம் எண்ணுவது போல் தெரிகிறது
வோடபோன் ஐடியாவின் டூயல் ஸ்ட்ரேடஜி: இந்நிறுவபனம் அடுத்த 2 மாதங்களில் அதன் மார்க்கெட்டிங் வரவு செலவு திட்டங்களை உயர்த்துவதாக கூறப்படுகிறது. இது இந்நிறுவனத்தின் டூயல் ஸ்ட்ரேடஜியின் (அதாவது இரட்டை மூலோபாயத்தின்) ஒரு பகுதியாகும், இதன் கீழ் ஒரே செலவில் இரண்டு வேலைகளை செய்ய உள்ளது.
ஒன்று - விரைவில் 5ஜி அறிமுகமாகும் என்கிற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும். இரண்டாவது - 5ஜி அறிமுகமாகிறது என்று கூறி புதிய சந்தாதாரர்களையும் பெறவும், ஏற்கனவே இருக்கும் சந்தாதாரர்களை தக்கவைக்கவும் திட்டமிட்டுள்ளது. இரண்டில் ஒன்று சரியாக நடந்தாலும் கூட அது நல்லது தான் என்கிற நிலையில் இருப்பதால் வோடாபோன் ஐடியாவிற்கு எது நடந்தாலும் ஓகே தான்!
"5ஜி அறிமுக போட்டியில்" வோடபோன் ஐடியாவிற்கு 'டஃப்' கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதை விட வேகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் டெல்லி வட்டத்தில் உள்ள 1,876 தளங்களில் உள்நாட்டு 5ஜி வணிகச் சேவைகளை (Indigenous 5G commercial services) வழங்க ஒரிஜினல் எக்யுப்மென்ட் மெனுஃபேக்சரர்களை (Original equipment manufacturers - OEMs) அழைக்கும் டெண்டரை வெளியிட்டது.
பிஎஸ்என்எல் அதன் 5ஜி சேவையின் "கவரேஜிற்காக" 900 மெகாஹெர்ட்ஸ் லோ-பேண்ட்டையும் மற்றும் "திறனுக்காக" 3.5 ஜிகாஹெர்ட்ஸ் மிட்-பேண்ட்யும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்நிறுவனம் 3.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 700 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளில் (3.6 GHz and 700 MHz spectrum bands), உள்நாட்டு 5ஜி ஆர்ஏஎன் (ரேடியோ அணுகல் நெட்வொர்க் - Radio access network) மற்றும் கோர் ஆகியவற்றை வெற்றிகரமாக சோதனையும் செய்து முடித்தது.
இது மிகவும் முக்கியமான ஒரு சோதனையாகும். ஏனென்றால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவைதவிர, பிரீமியம் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே ஆகும். அது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது பிஎஸ்என்எல் 5ஜி-கான முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications