தைரியம் தான்.. அப்போ Apple உண்மையாவே iPhone-ல் இந்த பழைய மாற்றத்தை கொண்டு வரத்தான் போகுதா?
சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லி இருக்கும் என்று பார்த்தால்.. ஆப்பிள் (Apple) நிறுவனம் உண்மையாகவே அதன் ஐபோன்களில் இந்த "பழைய மாற்றத்தை" கொண்டுவரத்தான் போகிறதா என்று பலரும் ஷாக் ஆகும்படியான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதென்ன மாற்றம்? என்ன மாடலில்? இதோ விவரங்கள்:
இந்த வார தொடக்கத்தில், ஆப்பிள் நிறுவனம் அதன் வரவிருக்கும் ஐபோன் 17 ஏர் மாடலை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் கிளவுட் டேட்டா சின்க்கிங் கொண்ட அதன் முதல் போர்ட்லெஸ் போனாக அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்களின் விதிகளை கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனம் இந்த யோசனையை கைவிட்டதாக கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐரோப்பிய ஒன்றியம் தான் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களில் உள்ள லைட்னிங் போர்ட்களை யூஎஸ்பி டைப்-சி போர்ட்டிற்கு மாற்ற காட்டாயப்படுத்தியது.
இதன் விளைவாக ஆப்பிள் நிறுவனம் அதன் கஸ்டம் லைட்டிங் போர்ட்டை கைவிட்டது. 2023 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 சீரிஸில் யூஎஸ்பி டைப்-சி போர்ட்களை சேர்த்தது. இதற்கிடையில் தான் ஐபோன் 17 ஏர் மாடலானது யூஎஸ்பி டைப்-சி போர்ட் இல்லாத மாடலாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டதாகவும், பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
தற்போது முற்றிலும் போர்ட்லெஸ் ஆன போனுக்காக யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கைவிடுவது சட்டப்பூர்வமானது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 9to5Mac வழியாக கிடைத்த அறிக்கையின்படி, முற்றிலும் போர்ட்லெஸ் போனுக்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கைவிடுவது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு இணங்கும்.
இந்த அறிக்கை, போர்ட்லெஸ் போன்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபெடெரிகா மிக்கோலி கூறியதை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக ஆப்பிள் நிறுவனம் "உண்மையாகவே" அதன் ஐபோன் 17 ஏர் மாடலை போர்ட்லெஸ் மாடலாக அறிமுகம் செய்யும் திட்டத்தை மீண்டும் கருத்தில் கொள்ளலாம் என்கிற சூழல் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் வழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலை யூஎஸ்பி டைப்-சி போர்ட் இல்லாமல் வெளியிட கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாகவும். இருப்பினும், சில கடைசி நிமிடத்தில் அதில் இருந்து பின்வாங்கியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ஆப்பிள் இந்த மாடல் மேக்சேஃப் சார்ஜிங்கை மட்டுமே நம்பியிருக்கும்படி உருவாக்க நினைத்தது.
இருப்பினும், "யூஎஸ்பி-சி சார்ஜிங் கட்டாயம்" என்கிற ஐரோப்பிய விதிகளுக்கு பயந்து, ஐபோன் 17 ஏர் மாடலில் டைப்-சி போர்ட்டை பேக் செய்ய வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது. ஆப்பிள் நிறுவனம் வெறும் 5.5 மிமீ தடிமன் கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் 17 ஏர் மாடலில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது உண்மையாக இருந்தால், இதுவரை இல்லாத அளவில் மிகவும் மெலிதான ஐபோன்களில் ஒன்றாக இது மாறும். இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் மற்றும் ஐபோன் 16 பிளஸை போலவே சுமார் $900 டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு மெலிதான வடிவமைப்பை அடைய, ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது ஸ்பீக்கரை அகற்றி, ரியர் கேமராவில் சிங்கிள் சென்சாரை மட்டும் பேக் செய்யலாம்.
இருப்பினும் ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது கேமரா கண்ட்ரோல் மற்றும் ப்ரோமோஷன் உடனான ஸ்மூத் டிஸ்பிளே போன்ற சில உயர்நிலை அம்சங்களையும் பெறும். பெரும்பாலான ஸ்லிம் போன்கள் சிறிய பேட்டரிகளை பேக் செய்யும்படி திட்டமிடப்படுகின்றன. ஆனால் ஆப்பிள் இந்த சிக்கலை சரிசெய்யும் வேலையில் இருப்பதாகவும், ஸ்லிம் ஆன பாடி இருந்தபோதிலும் பேட்டரி லைஃப்பை வலுவாக வைத்திருக்க ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலின் டிஸ்பிளே, சிப்செட் மற்றும் சாஃப்ட்வேரை ரீடிசைன் செய்துள்ளதாகவும் குர்மன் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications








