பறந்து பறந்து டெலிவரி- வானத்தில் வரும் பீட்சா: ட்ரோன்கள் மூலம் பீட்சா டெலிவரி!
தென் கொரிய ட்ரோன் நிறுவனமான "பி-ஸ்கொயர்" மற்றும் உலகளாவிய பீட்சா தொடரான டொமினோஸ் பீட்சாவுடன் இணைந்து செஜோங் நகரில் ட்ரோன் மூலம் பீட்சா விநியோகத்தை வணிகமயமாக்குவதாக அறிவித்துள்ளது.

ட்ரோன்கள் மூலம் பீட்சா விநியோகம்
ட்ரோன்கள் மூலம் பீட்சா விநியோகத்தை வணிகமயமாக்க இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், செஜோங் நகரில் ட்ரோன் மூலம் பீட்சா விநியோகத்தை கொரிய நிறுவனம் "பி-ஸ்கொயர்" மற்றும் உலகளாவிய தொடரான டொமினோஸ் பீட்சா இணைந்து டெலிவரி செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

வணிகமயமாக்கல் பகுதி
ட்ரோன் விநியோகத்தின் வணிகமயமாக்கல் பகுதி குறித்து பார்க்கையில் இது செஜோங் போரம் கிளையில் இருந்து செஜோங் லேக் பார்க் வரையாக இருக்கிறது. செஜோங் நகரமானது இந்த ஆண்டு ட்ரோன் செயலாக்க நகரமாகவும் சிறப்பு தாராளமயமாக்கள் மண்டலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதியின் ஒத்துழைப்போடு இது இயக்கப்படுகிறது.

பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை
தகவலின்படி ட்ரோன் டெலிவரியானது ஒரு மணி நேரத்தில் இரண்டு முதல் மூன்று முறை திட்டமிடப்பட்டுள்ளது. இது பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது. இதுகுறித்து தென்கொரியாவின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரவித்த அறிவிப்பில் செஜோங் ஏரி பூங்காவிற்கு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் மக்களுக்கு மொபைல் ஆப் மூலமாக ட்ரோன் டெலிவரி சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதன் முதல் வணிகமயமாக்கலை நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் நிறுவனம் அறிவிக்கும்.

ட்ரோன் டெலிவரி மூலம் பீட்சா
ட்ரோன் டெலிவரி மூலம் பீட்சா பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் செஜோங் லேப் பார்க் அருகே இருக்கும் டொமினோஸ் பீட்சாவின் அதிகாரப்பூர்வ டெலிவரி செயலியில் ஆர்டர் செய்வதன் மூலம் மொபைல் ஆப் வழியாக ட்ரோன் இருப்பிடத்தை கண்காணிக்கலாம். பீட்சா வாங்கும்போது திருட்டு மற்றும் இழப்பை தடுக்க செயல்முறையில் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

மல்டி ரவுட்டர் பயன்பாடு
சமீபத்தில் சோமேட்டோ நிறுவனம் இந்தியாவில் ட்ரோன் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஆன்லைன் ஆப் மூலம் செய்யப்படும் உணவுகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய சோமேட்டோ முயற்சி எடுத்து
வருகிறது. இந்த ட்ரோன் பயன்பாட்டுக்கு லக்னோவைச் சேர்ந்த ஒரு தனியார் டெக் நிறுவனத்திடம் சொமாட்டோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இன்டெர்நெட் சிக்னல் போல ட்ரோன் சிக்னல்களுக்காக மல்டி ரவுட்டர் பயன்படுத்தி உணவுப் பார்சல்களை டெலிவரி செய்ய முடியும் என அந்த டெக் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆர்டர் செய்யப்படும் உணவுகள்
ஆர்டர் செய்யப்படும் உணவுகள் இனி ட்ரோன் மூலம் டெலிவரி செய்வதற்கான முயற்சியில் இதை செயல்படுத்த உள்ளதாக சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஒ குறிப்பிட்டார். இந்த ட்ரோன் வசதிகளை செய்து தர ஒப்பந்தம் ஆகியுள்ள நிறுவனம் பெயர் என்னவென்றால் டெக் ஈகிள் என்று தெரவிக்கப்பட்டுள்ளது, லக்னோவை சேர்ந்த இந்நிறுவனம் ஐஐடி கான்பூரில் படித்த விக்ரம் சிங் மீனா என்பவரால் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
File Images


Click it and Unblock the Notifications