இஸ்ரோ ஊழியர்களுக்கு மருந்து வினியோகிக்க பயன்படுத்தப்படும் ட்ரோன்.!
தமிழகத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதுவும் மளிகை, காய்கறி, பலசரக்கு கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா கட்டுப்பாடாக டாஸ்மார்க் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல்அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள்,இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில்பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள்மக்களை எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அருகில், அதன் ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதி உள்ளது. குறிப்பாக இங்கு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 300 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு உதவ ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் இதற்கு வேண்டிசென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்தது என்னவென்றால், குடியிருப்பில் வசிக்கும் இஸ்ரோ ஊழியர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் காய்கறிகளை வழங்கவும், அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சோதனை ஓட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் உக்கிர தாண்டம் ஆடி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.மேலும் இந்த கொரோனா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகின்றன.


Click it and Unblock the Notifications