Home
News

ட்ரோன் மூலம் இரத்த மாதிரிகளை வெறும் 18 நிமிடத்தில் அனுப்பி இந்திய மருத்துவர்கள் சாதனை!

இந்தியாவிலேயே முதல் முறையாக, உத்தரகாண்டில் ட்ரோன் மூலம் இரத்த மாதிரிகள் ஒரு இடத்திலிருந்து தொலைவில் உள்ள கிராமத்திற்கு மிக விரைவாகக் கொண்டு செல்லப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

36 கிலோ மீட்டர் தொலைவை கடந்த டிரோன்

36 கிலோ மீட்டர் தொலைவை கடந்த டிரோன்

உத்தரகாண்ட் மாநிலம், நந்தகான் மாவட்ட மருத்துவமனையிலிருந்து, சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு டிரோன் மூலம் ரத்த மாதிரிகளை பாதிப்படையாமல் மருத்துவர்கள் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.

18 நிமிடத்தில் சாதனை

18 நிமிடத்தில் சாதனை

சாலை வழியாக நந்தகான் மாவட்டத்திலிருந்து, டெஹ்ரி மாவட்டம் செல்ல சுமார் 70 நிமிடங்கள் முதல் 100 நிமிடங்களாகும். ஆனால் அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தி வெறும் 18 நிமிடத்தில் கடந்து புதிய சாதனையை இந்திய மருத்துவர்கள் தற்பொழுது படைத்துள்ளனர்.

குளிர் சத்தான பெட்டியுடன் டிரோன்

குளிர் சத்தான பெட்டியுடன் டிரோன்

போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடையூறுகள் எதுவும் இன்றி டிரோன் மூலம் வெறும் 18 நிமிடங்களில் டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இரத்த மாதிரிகள் எந்த வித பாதிப்பும் அடையாமல் இருப்பதற்குக் குளிர்சாதன பேட்டிகளுடனே ட்ரோனில் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவர்கள் புதிய சாதனை

இந்திய மருத்துவர்கள் புதிய சாதனை

இந்த முறையை மேலும் விரிவுபடுத்தி, மருத்துவத் துறையில் ட்ரான்களின் பயன்பாட்டை அதிகரிக்கப் போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வாகனப் போக்குவரத்து இல்லாத கிராம மக்களும் உரிய நேரத்தில் மருத்துவர்களால் உதவ முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Drone flies blood samples from Uttarakhand to remote village in just 18 minutes : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X