இமயமலையில் இதுநாள் வரை 'மறைந்து கிடந்த' பனியாறு..!

|

இமயமலை - பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என மொத்தம் ஐந்து நாடுகளில் பரவியுள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். எப்பொழுதும் உறைபனியால் மூடிக்கிடக்கும் இந்த மலைத்தொடரில் உலகின் மாபெரும் மற்றும் மிக உயர்ந்த மலைகள் மற்றுமின்றி ஆயிரக்கணக்கான விந்தைகளும், ரகசியங்களும், சுவாரசியங்களும், பேரழகுகளும் உடன் புதைந்து கிடக்கின்றன என்பதும் தான் உண்மை..!

<strong>விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..! </strong>விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..!

அப்படியாக சமீபத்தில், இமயம் இத்தனை நாளாக தன்னுள் மறைத்து வைத்திருந்த, அழகால் மிரள வைக்கும் ஒரு இடத்தை பறக்கும் ட்ரோன் மூலம் கண்டறியப்பட்டு, புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களையும், மேலும் அது சார்ந்த தகவல்களையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

புகைப்படக்கலைஞர் :

புகைப்படக்கலைஞர் :

டேவிட் கஸில்கோவொஸ்கி (David Kaszlikowski) என்பவர் போலாந்து நாட்டை சேர்ந்த ஒரு புகைப்படக்கலைஞர் ஆவார்.

ஆவணப்படம் :

ஆவணப்படம் :

டேவிட் கஸில்கோவொஸ்கி ஆவணப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே2 - டச்சிங் தி ஸ்க்கை :

கே2 - டச்சிங் தி ஸ்க்கை :

அப்படியாக, தனது அடுத்த ஆவணப்படம் ஆன கே2 - டச்சிங் தி ஸ்க்கை (K2 Touching the Sky) எடுப்பத்றக்காக இமயமலை த் தொடரின் கே-2 கொடுமுடியில் தங்கி உள்ளனர்.

கே-2 :

கே-2 :

கே-2 என்பது - உலகில் உள்ள உயரமான மலைகளிலேயே இரண்டாவது உயரமான கொடுமுடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

'மறைந்து கிடந்த' பனியாறு :

'மறைந்து கிடந்த' பனியாறு :

'கே2 - டச்சிங் தி ஸ்க்கை' ஆவணப்படம் தொடர்பாக தனது டிஜேஐ பான்டோம் வகை பறக்கும் ட்ரோனை (DJI Phantom drone) பறக்கவிட்டு சுற்றியுள்ள காட்சியமைப்புகளை ஆராயும் போது இதுநாள் வரை 'மறைந்து கிடந்த' பனியாறு தென்பட்டுள்ளது.

காட்சி :

காட்சி :

கண்டுப்பிடிக்கப்பட்ட பனியாறு 65 அடி அளவிலான குளம் சூழப்பட்ட பாளங்களின் ஒரு பகுதியாக காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ராஃபிக் ஃப்ரேம் :

க்ராஃபிக் ஃப்ரேம் :

இது ஒரு மிகவும் சிறப்பான இடம் என்றும், மிகவும் சுத்தமான க்ராஃபிக் ஃப்ரேம் (graphic frame) கொண்டது என்று டேவிட் கஸில்கோவொஸ்கி கூறியுள்ளார்.

 உறையும் - மறையும்  :

உறையும் - மறையும் :

இந்த இடமானது நாளுக்கு நாள் உறையும், மாற்றம் அடையும், சில காலங்களில் மறைந்து கூடப் போகலாம் இனி இதைப்போல் ஒரு புகைப்படத்தை எடுக்கவே இயலாது என்றும் டேவிட் கஸில்கோவொஸ்கி கூறியுள்ளார்.

கேனான் :

கேனான் :

இந்த 30 நொடி எக்ஸ்போஷார் ஷாட்டை எடுக்க கேனான் மார்க் 5 டி த்ரீ (Canon 5D Mark II) பயன் படுத்தப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் :

ட்ரோன்கள் :

வேறு ஒரு உலகம் போல் காட்சி அளிக்கும் இது போன்ற இடங்களை காணவும், முடிந்த அளவிலான புகைப்படங்களை எடுக்கவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பமான ட்ரோன்கள் மிகவும் உதவுகின்றன என்றும் டேவிட் கஸில்கோவொஸ்கி தெரிவித்துள்ளார்.

காட்வின்- ஆஸ்டன் :

காட்வின்- ஆஸ்டன் :

கண்டுப்பிடிக்கப்பட்ட பனியாறு ஆனது கே-2 கொடுமுடியின் அடியில் உள்ள காட்வின்- ஆஸ்டன் பனியாற்றின் (Godwin-Austen Glacier) அருகே உள்ளது.

ட்ரெய்லர் :

கே2 - டச்சிங் தி ஸ்க்கை ஆவணப்படத்தின் 'தீம் மியூசிக்' ட்ரெயிலரை காண இங்கே கிளிக் செய்யவும்..!

வலைதளம் :

வலைதளம் :

டேவிட் கஸில்கோவொஸ்கியின் மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை உள்ளடக்கிய அவரின் வலைதளத்தை காண இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>உங்க மூஞ்சி 'எப்படி' இருக்கும்..!?? (புகைப்படத் தொகுப்பு)</strong>உங்க மூஞ்சி 'எப்படி' இருக்கும்..!?? (புகைப்படத் தொகுப்பு)

<strong>உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!</strong>உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!

<strong>இந்திய இரவுகள் : பிரமிக்க வைக்கும் அழகு..! (புகைப்படத்தொகுப்பு)</strong>இந்திய இரவுகள் : பிரமிக்க வைக்கும் அழகு..! (புகைப்படத்தொகுப்பு)

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படம் : டேவிட் கஸில்கோவொஸ்கி

Best Mobiles in India

Read more about:
English summary
Drone Discovers Stunning Glacier Scene Hidden in the Himalayas. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X