ஜியோ உட்பட 5 நிறுவனங்கள் உருவாக்கிய முதல் தானியங்கி டிராக்டர்: உழவ வருகிறது.!
பலருக்கும் டிரைவர் இல்லாத கார்கள் பற்றிய செய்திகள் தெரிந்திருக்கும்.
பலருக்கும் டிரைவர் இல்லாத கார்கள் பற்றிய செய்திகள் தெரிந்திருக்கும். சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆட்டோமேட்டிக் கார்களின் தயாரிப்பு மற்றும் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், இந்தியர்களுக்கு அதிலும் முக்கியமாக விவசாய நண்பர்களுக்கு நற்செய்தியாக எஸ்கார்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.
தானியங்கி கார்களை போல் முதல் பிரத்தியேக டிரைவர் இல்லா தானியங்கி டிராக்டர் ஐ எஸ்கார்ட் நிறுவனம் இந்திய விவசாய மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு எஸ்கார்ட் நிறுவனம் விவசாய இயந்திரங்கள், பன்னை உபகரணங்கள் மற்றும் பொறியியல் சாதனங்களை இந்திய விவசாய நண்பர்களுக்கு வழங்கிய இந்திய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய மேம்பாடு
விவசாய மேம்பாட்டிற்காக மிக துல்லியமான பல விவசாய எந்திரங்களை வழங்கிய எஸ்கார்ட் நிறுவனம் விவசாயத்திற்குக் கைகொடுக்கும் வகையில் தானியங்கி விவசாய எந்திரங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மும்முரமாக இறங்கியது. அந்த முயற்சியின் அடையாளமாக இந்த ஆல் இல்லா தானியங்கி டிராக்டரை எஸ்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தானியங்கி டிராக்டர்
இந்தத் தானியங்கி டிராக்டர் தயாரிப்பதற்கு தொழில்நுட்ப சாம்பவன்களான மைக்ரோசாஃப்ட், ரிலையன்ஸ் ஜியோ, ட்ரிம்பில், சம்வர்தனா மதர்சன் குரூப், வாபிக்கோ, போஸ்ச் மற்றும் ஏவிஎல் ஆகிய நிறுவனங்களுடனான கூட்டணியினால் மட்டுமே சத்தியம் ஆனது என்று எஸ்கார்ட் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த சாகுபடி மற்றும் வருவாய்
சிறந்த சாகுபடி மற்றும் வருவாயைப் பெறுவதற்கு எஸ்கார்ட் நிறுவனம், விவசாயிகளுக்குத் தேவையான விவசாய நுண்ணறிவு, மண்ணின் தன்மை மேம்பாடு, சிறந்த விதைகள், நீர் மேலாண்மை தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகள் என அனைத்துத் துறையிலும் டிஜிட்டல் தளத்தை ஒருங்கிணைந்து விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தது.

ட்ரிம்பில் & வாபிக்கோ(WABCO)
இந்தத் தானியங்கி டிராக்டர் ஐ உருவாக்க எலக்ட்ரிக் டிரைவ்லைன் தொழில்நுட்பத்தை ஏவிஎல்
நிறுவனத்திடமிருந்தும் எஸ்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இத்துடன் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார்கள், கண்ட்ரோல்கள், நீர் அளவு மேலாண்மை சிஸ்டம் மற்றும் தானியங்கி ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தை ட்ரிம்பில் நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கிறது. தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் வாகனத்திற்கான கட்டுப்பாட்டு அமைப்பு தொழில்நுட்பத்தை வாபிக்கோ(WABCO) நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

ஜியோ & போஸ்ச்
தானியங்கி டிராக்டர்க்கான பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் தளத்திற்கான தொழில்நுட்ப சேவையை ஜியோ நிறுவனம் உருவாகியுள்ளது. எதிர்கால மாசு கட்டுப்பாட்டிற்கான எமிஷன் கண்ட்ரோலர் தொழில்நுட்பம் போஸ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல நிறுவங்களுடன் இணைந்து இந்தத் தானியங்கி டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எஸ்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications