புது ஆஃபீஸ் ரூல்.! நான் லீவ்ல இருக்கேன்.! மீறி டிஸ்டர்ப் செஞ்சா 1 லட்சம் ஃபைன்.!
வாரத்தில் இரண்டு நாட்கள் ஒட்டுக்காக லீவ் (Leave) கிடைத்தால் பெரும்பாலானோர் ஹேப்பி ஆகிவிடுவார்கள்.. நம்மூர் மீம்ஸ்களில் குறிப்பிடுவது போல; "இந்தா லீவு விட்டாச்சுல.. வீக் எண்டு வந்துடுச்சுல.. இனி சின்ராசை கையில பிடிக்க முடியாது.." என்பது போல எல்லோரும் படு பிஸியாகி விடுவார்கள்.!

10 நாள் அல்லது ஒரு வாரம் முழுமையாக விடுமுறையா?
வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் போதே இவ்வளவு குஷி என்றால், ஒரு அலுவலகத்தில் உங்களுக்கு பத்து நாள் அல்லது குறைந்தது ஒரு வாரம் முழுமையாக விடுமுறை வழங்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.!
இதெல்லாம் யோசிப்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கும்; ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை..!

புதிய விதிமுறைப்படி 1 வாரம் வரை கூட லீவ் எடுக்கலாம்.!
இத்தகைய செயலை எந்த நிறுவனமும் செய்யாது என்றும் சிலர் முணுமுணுப்பது எங்களுக்கு இங்கே கேட்கிறது. ஆனால், உண்மையைச் சொல்லப் போனால், ஒரு நிறுவனம் இதை இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்காக ஒரு புதிய விதிமுறையைத் தனது அலுவலகத்தில் இந்நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைப்படி இந்த நிறுவனத்தில் பணிபுரியும் வேலை ஆட்கள் ஒரு வார விடுமுறையோ அல்லது 10 நாட்கள் விடுமுறையோ தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

Dreams 11 UNPLUG விதினா என்ன? இது எப்படி செயல்படும்?
ஊழியர்கள் லீவு எடுக்கும் இந்த தருணத்தில் நிறுவனத்திடம் இருந்தோ அல்லது நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு நபரிடம் இருந்தோ எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருப்பதற்காக ட்ரீம்ஸ் 11 நிறுவனம் புதிதாக "ட்ரீம்ஸ் 11 அன்பிளக்" (Dreams 11 UNPLUG) என்ற புதிய விதிமுறையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய விதிமுறைப்படி ஊழியர்கள் விடுமுறையில் இருக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு தொடர்பும் மேற்கொள்ளப்படாது.

ஒரு போன் கால் அல்லது குரூப் மெசேஜ் கூட வராதா? அடடே.!
அதாவது, அலுவலகம் தொடர்பான அழைப்புகள், மெசேஜ்கள், அல்லது எந்தவொரு ஈமெயிலும், எந்த ஒரு வாட்ஸ் அப் குரூப் டெக்ஸ்டுகளும் கூட அவர்களைத் தொந்தரவு செய்யாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் இந்த ஊழியர்கள் நீண்ட நாள் விடுமுறையில் செல்லும் பொழுது இவர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடிய எந்த விஷயங்களையும் நிறுவன ஊழியர்கள் செய்யக்கூடாது என்பதே இந்த விதியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

இந்த விதியை அமல்படுத்த என்ன காரணம் என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.!
இந்த விதிமுறை உண்மையிலேயே ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை வழங்கும் என்று நிறுவனம் நம்புகிறது. ஊழியர்களின் மனநிலை பாதிக்கப்படக்கூடாது என்பதில் ஏன் நிறுவனம் எவ்வளவு கருத்தாக இருக்கிறது? என்று கேட்ட பொழுது, அந்த நிறுவனத்தின் தலைவர் கூறிய பதில்களை நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும்.

விடுமுறையில் டிஸ்டர்ப் செய்தால் என்ன பாதிப்புகள் உருவாகும்?
ட்ரீம்ஸ் லெவன் நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத் ஆகியோர் கூறிய தகவலின் அடிப்படையில், ஊழியர்கள் தங்களுடைய மன ஆறுதலுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகவும் விடுமுறையில் செல்லும் நேரத்தில் எந்த ஒரு தொல்லையையும் நிறுவனம் வழங்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதிலும் நிறுவனம் கவனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஓ.. இது தான் காரணமா? கம்பெனிக்கு பொறுப்பு இருக்கு.!
விடுமுறையில் மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரம் செலவழிக்கும் போது, அல்லது தனியாக இருக்கும்போது, அல்லது அவர்களுடைய விடுமுறையை ரசித்துக் கொண்டிருக்கும் போது, அலுவலக தொடர்பான செய்திகள் அவர்களுடைய மன நிலையைப் பாதிக்கக் கூடும் - அப்படிப் பாதிக்கப்பட்டால் அவருடைய வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும், அதன் மூலம் அந்த வாழ்க்கைத் தரம் ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் அலுவலகத்திலும் பாதிக்கப்படக் கூடும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மீறினால் 1 லட்சம் அபாரதமா?
இந்த அன்-பிளக் காலத்தில் வேறு ஏதேனும் ஒரு பணியாளர் யாரையாவது வேலை செய்யத் தொடர்பு கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு, அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் முதல் தலைமை அதிகாரி முதல் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








