முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி

|

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் துவங்கிய நேரத்தில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் அதன் இராணுவ படைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த துவங்கிவிட்டன. குறிப்பாக, ஒவ்வொரு நாடும் அதன் முப்படைகளின் தாக்குதல் சக்தியை வேகமாக மேம்படுத்தி வருகின்றன. முன்னணி நாடுகள் மட்டும் இதில் கவனம் செலுத்தவில்லை, வளர்த்து வரும் நாடுகளும் கூட இதில் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

தாக்குதல் சக்தியை அதிகரிக்கும் பணியில் இந்தியா மும்முரம்

தாக்குதல் சக்தியை அதிகரிக்கும் பணியில் இந்தியா மும்முரம்

இந்தியாவும் கூட அதன் தாக்குதல் சக்தியை அதிகரிக்கும் பணியில் மிகவும் மும்முரமாக பணியாற்றி வருகிறது. இந்தியா அதன் முப்படைகளின் சக்தியை கொஞ்சம்-கொஞ்சமாக பெருக்கி வருகிறது. அந்த வரிசையில் இந்தியா இப்போது, முதல் முறையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு முழு ஆட்டோனோமஸ் பிளையிங் விங் டெக்னாலஜி டெமோன்ஸ்ட்ரேடர் என்ற புதிய பறக்கும் சக்தியை உருவாக்கி அதை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

முதல் மேட்-இன்-இந்தயா ஆட்டோனோமஸ் பிளையிங் விங் விமானம்

முதல் மேட்-இன்-இந்தயா ஆட்டோனோமஸ் பிளையிங் விங் விமானம்

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மேட்-இன்-இந்தயா ஆட்டோனோமஸ் பிளையிங் விங் டெக்னாலஜி டெமோன்ஸ்ட்ரேடரின் முதல் விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முழு தன்னாட்சி முறையில் இயங்கும் இந்த விமானம், ஆட்டோமேட்டிக் டேக் அஃப், பாயிண்ட் நேவிகேஷன் மற்றும் ஸ்மூத் டச் டவுன் உட்பட சரியான விமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

புதிய ஆயுத சக்தியை சேர்க்கும் இந்தியா

புதிய ஆயுத சக்தியை சேர்க்கும் இந்தியா

எதிர்கால ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான முக்கியமான தொழில்நுட்பங்களை நிரூபிப்பதில் இந்த விமானம் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் அத்தகைய மூலோபாய பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தன்னிறைவுக்கான ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்தியாவிற்கு புதிய ஆயுத சக்தியைக் கொடுக்கும் என்றும், இதன் மூலம் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

இந்த விமானத்தின் முழு கட்டுப்படும் ஆட்டோனோமஸாக செயல்படுகிறது

இந்த விமானத்தின் முழு கட்டுப்படும் ஆட்டோனோமஸாக செயல்படுகிறது

ஆளில்லா வான்வழி வாகனம் டிஆர்டிஓவின் முதன்மையான ஆராய்ச்சி ஆய்வகமான பெங்களூரு ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் (ஏடிஇ) மூலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய டர்போஃபன் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. விமானத்திற்குப் பயன்படுத்தப்படும் ஏர்ஃப்ரேம், அண்டர்கேரேஜ் மற்றும் முழு விமானக் கட்டுப்பாடு மற்றும் ஏவியோனிக்ஸ் அமைப்புகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் சக்தியை அதிகரிக்க இன்னும் அதிக திட்டம்

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் சக்தியை அதிகரிக்க இன்னும் அதிக திட்டம்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் DRDO-வை வாழ்த்தி, இது ஆட்டோனோமஸ் விமானங்களுக்கான மிகப்பெரிய சாதனை என்றும், முக்கியமான இராணுவ அமைப்புகளின் அடிப்படையில் 'ஆத்மநிர்பர் பாரத்'க்கு இது வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார். இதேபோல், இன்னும் பல பாதுகாப்பு மேம்படுத்தல்களை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் ஆயுத சக்தியை விரிவாக்கும் இன்னும் பல முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
DRDO Tests Made-In-India Autonomous Flying Wing Technology Demonstrator Plane To Add More Fire Power

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X