அக்னி பி: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை.! வெற்றி.!

|

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த டிஆர்டிஓ அமைப்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன அக்னி பி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

அக்னி பி ஏவுகணை

அக்னி பி ஏவுகணை

வெளிவந்த தகவலின்படி, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணை,ஒடிசா மாநிலத்தின் பலாசேர் அருகில் இருக்கும் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து நேற்று காலை 10.55 மணிக்கு வெற்றிகரமாகசோதனை செய்யப்பட்டது.

 கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் பல்வேறு

குறிப்பாக கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் இந்த ஏவுகணை கண்காணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் சோதனை செய்யும் அடுத்த 'அந்த' அப்டேட்கள் இது தான்.. இனி லாஸ்ட் சீன் கிடையாதா?வாட்ஸ்அப் சோதனை செய்யும் அடுத்த 'அந்த' அப்டேட்கள் இது தான்.. இனி லாஸ்ட் சீன் கிடையாதா?

பாதையில் சரியாக

அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சரியாக பயணித்து இந்த ஏவுகணை மிகவும் துல்லியமாக இலக்கை அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையை மேற்கொண்டது பாதுகாப்பு ஆராய்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம்

இந்த அக்னி பி ஏவுகனை ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை கொண்டுள்ளது இந்த புதிய வகை ஏவுகணை.

பினாகா ராக்கெட் சோதனை

பினாகா ராக்கெட் சோதனை

மேலும் கடந்த வாரம்இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று சரியாக தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறவனம் (டிஆர்டிஓ) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது.ஒடிஸா மாநிலத்தில் இருக்கும் பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சண்டீபூரில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மொத்தம் 25 பினாகா ராக்கெட்டுகளை ராக்கெட் ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் தெரிவித்தது

மேலும் முக்கிய அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக இந்த ராக்கெட்டுகள் தாக்கின என்று கூறியுள்ளனர். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த பினாகா ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிஆர்டிஓவின் வெற்றிகரமான இந்த சோதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த சோதனையில் ஈடுபட்ட குழுவினருக்கும் டிஆர்டிஓ செயலர் சதீஷ் ரெட்டி பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Best Mobiles in India

English summary
DRDO successfully tests Agni B missile: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X