சத்தமின்றி பினாகா ராக்கெட் சோதனையை நடத்தியது டிஆர்டிஓ: வெற்றி.!
இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று சரியாக தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெள்ளிக்கிழமை
வெற்றிகரமாக நடத்தியது.

வெளிவந்த தகவலின்படி ஒடிஸா மாநிலத்தில் இருக்கும் பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சண்டீபூரில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மொத்தம் 25 பினாகா ராக்கெட்டுகளை ராக்கெட் ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் முக்கிய அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக இந்த ராக்கெட்டுகள் தாக்கின என்று கூறியுள்ளனர். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த பினாகா ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக டிஆர்டிஓவின் வெற்றிகரமான இந்த சோதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த சோதனையில் ஈடுபட்ட குழுவினருக்கும் டிஆர்டிஓ செயலர் சதீஷ் ரெட்டி பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்த்ககது.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் டிஆர்டிஓ தானியங்கிஆக்ஸிஜன் விநியோகக் கருவியை உருவாக்கி இருந்தது.

அதாவது டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் மற்றும் மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் பெங்களூருவில் அமைந்திருக்கிறது. இந்த ஆய்வகம் ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகள் அடிப்படையில் ஆக்ஸிஜனை உருவாக்கும் தானியங்கி ஆக்ஸிஜனை விநியோக அமைப்பு முறையில் உருவாக்கியது. இது தேவையான நேரத்தில் ஆக்ஸிஜனை வழங்கி உயிருக்கு ஆபத்து ஏற்படாமல்மனிதர்களை காக்கும் திறன் கொண்டது.

ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் இந்த கருவியானது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் கருவியாகும்.இது செயல்திறன் மிக்க வகையில் குறைவான விலையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த கருவி உற்பத்தி முன்னதாக தொடங்கப்பட்டு விட்டது. இதன் கூடுதல் அம்சம் என்னவென்றால் இந்த கருவியை யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்பதால் களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் மிக உதவியாக இருக்கும்மேலும் இதை கையாளுவதில் சிக்கல் இருக்காது என்பதால் இது பல்வேறு வகையிலும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications