இது ஆகச்சிறந்த உதவி: கொரோனா நோயாளிகளுக்கு டிஆர்டிஓ அட்டகாச கருவி- தானியங்கி ஆக்ஸிஜன் விநியோகம்!

|

கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக 2884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 9330-க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. அதேசமயத்தில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகின்றனர் என்பதும் ஆறுதலடையும் தகவலாக உள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவ தட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து மருத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிஆர்டிஓ தானியங்கி ஆக்ஸிஜன் விநியோகக் கருவி

டிஆர்டிஓ தானியங்கி ஆக்ஸிஜன் விநியோகக் கருவி

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் டிஆர்டிஓ தானியங்கி ஆக்ஸிஜன் விநியோகக் கருவியை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்களை பார்க்கலாம். டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது கொரோனா நோயாளிகளுக்கு தானியங்கி ஆக்ஸிஜன் விநியோகக் கருவியை உருவாக்கி உள்ளது.

ராணுவ வீரர்களுக்கு பயன்படும் பாதுகாப்பு கருவி

ராணுவ வீரர்களுக்கு பயன்படும் பாதுகாப்பு கருவி

உயரமான பனிப்பிரதேச இடங்களில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு ரத்த பிராணவாயு செறிவூட்டல் (எஸ்பிஓ2) வெளியீட்டு தானியங்கி துணை ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு கருவியை உருவாக்கி உள்ளது.

பேருதவியாக இருக்கும் கருவி

பேருதவியாக இருக்கும் கருவி

டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் மற்றும் மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் பெங்களூருவில் அமைந்திருக்கிறது. இந்த ஆய்வகம் ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகள் அடிப்படையில் ஆக்ஸிஜனை உருவாக்கும் தானியங்கி ஆக்ஸிஜனை விநியோக அமைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தேவையான நேரத்தில் ஆக்ஸிஜனை வழங்கி உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் மனிதர்களை காக்கும் திறன் கொண்டது.

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை

ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அந்த மாநிலத்தில் வர்தகம் முடங்கிய நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தி அதிகரிக்க கோரிக்கை

ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தி அதிகரிக்க கோரிக்கை

இந்த கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. அதாவது நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தேவையாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆலையின் முழுதிறனுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்தார்.

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் கருவி

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் கருவி

இந்த காலக்கட்டத்தில் டிஆர்டிஓ கருவி வரப்பிரதாசமாக இருக்கிறது. ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் இந்த கருவியானது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் கருவியாகும். இது செயல்திறன் மிக்க வகையில் குறைவான விலையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எளிதாக இயக்கும் வகையில் கருவி

எளிதாக இயக்கும் வகையில் கருவி

தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த கருவி உற்பத்தி முன்னதாக தொடங்கப்பட்டு விட்டது. இதன் கூடுதல் அம்சம் என்னவென்றால் இந்த கருவியை யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்பதால் களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதால் இந்த கருவி மிக உதவியாக இருக்கும் மேலும் இதை கையாளுவதில் சிக்கல் இருக்காது என்பதால் இது பல்வேறு வகையிலும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
DRDO is developing Spo2 Oxygen Delivery System to benefit Corona Patients

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X