அடேங்கப்பா.,இந்தியாவின் போர் விமானங்களை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்: டி.ஆர்.டி.ஓ அசத்தல்.!

|

டி.ஆர்.டி.ஓ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் இந்தியாவின் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் 'சாப்' எனும் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பொருத்தும் வகையிலான சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ எனும் கருவி

அதாவது டி.ஆர்.டி.ஓ வெளியிட்ட தகவலின்படி, ஜோத்பூர் மற்றும் புனேவில் இருக்கும் டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்கள் இணைந்து போர் விமானத்தில் பொருத்தும் வகையிலான சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ எனும் கருவியை உருவாக்கியுள்ளன.

சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ கருவியில்

குறிப்பாக சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ கருவியில் சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார்த் துகள்கள் லட்சக்கணக்கில்அடைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

SBI நெட் பேங்கிங் பயனர்களுக்கு எச்சரிக்கை.! இந்த 8 பாதுகாப்பு விஷயங்களை உடனே கவனிக்க SBI அறிவிப்பு..SBI நெட் பேங்கிங் பயனர்களுக்கு எச்சரிக்கை.! இந்த 8 பாதுகாப்பு விஷயங்களை உடனே கவனிக்க SBI அறிவிப்பு..

போர் விமானம் பறந்து

மேலும் போர் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது இந்த துகள்களை வெளியேற்றி காற்றில் பறக்கவிடுவதன் மூலம், தாக்க வரும் எதிரிநாட்டு ஏவுகணையை ரேடார் உதவியுடன் திசை திருப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போர் விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் போர் விமானத்திற்கு சிறந்த பாதுகாப்பை கொடுக்கிறது சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ கருவி.

இதுக்கு தான் ஒரு ஐபோன் வேணும்: விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தும் பாதிப்படையாத ஐபோன்.இதுக்கு தான் ஒரு ஐபோன் வேணும்: விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தும் பாதிப்படையாத ஐபோன்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்

இந்த அதிநவீன 'சாப்' தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உள்நாட்டிலேயே உருவாக்கிய குழுவினரை பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது? வெறும் ரூ.3,499 விலையில் ஆண்ட்ராய்டு 11 உடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா? முழு விபரம் இதோ..எது? வெறும் ரூ.3,499 விலையில் ஆண்ட்ராய்டு 11 உடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா? முழு விபரம் இதோ..

மாதங்களுக்கு முன்பு நீண்ட

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீண்ட தூரம் சென்று சரியாக தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை பாதுகாப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வெற்றிகரமாக நடத்தியது. குறிப்பாக ஒடிஸா மாநிலத்தில் இருக்கும் பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சண்டீபூரில் மொத்தம் 25 பினாகா ராக்கெட்டுகளை ராக்கெட் ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டுசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இனி அமிதாப் பச்சன் உங்கள் வீட்டில்- அலெக்சாவுக்குள் வந்த அமிதாப் பச்சன்: தெறிக்கவிடும் அமேசன் அலெக்சா அப்டேட்!இனி அமிதாப் பச்சன் உங்கள் வீட்டில்- அலெக்சாவுக்குள் வந்த அமிதாப் பச்சன்: தெறிக்கவிடும் அமேசன் அலெக்சா அப்டேட்!

கப்பட்டுள்ளன. இதேபோ

மேலும் முக்கிய அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக இந்த ராக்கெட்டுகள் தாக்கின என்று கூறியுள்ளனர். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த பினாகா ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ).

News Source: indianexpress.com

Photo : PIB

Best Mobiles in India

English summary
DRDO has developed advanced technology to protect warplanes from missile attacks: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X