Home
News

அடிச்சான் பாரு! பாதிக்கு பணம் கொடுத்தா போதும்.. மீதி இலவசம்.. Vodafone-ன் டபுள் டேட்டா ஆபர்! எந்த திட்டத்தில்?

இந்நேரம் உங்களில் பலரும், கடந்த ஜூலை 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் அமலுக்கு வந்த மொபைல் ரீசார்ஜ் விலை உயர்விற்கு (Mobile Recharge Price Hike) பழகிப்போய் இருப்பீர்கள். பழகித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் நாம் பார்த்த எல்லா ரீசார்ஜ் விலை உயர்வுகளையும் நாம் பழகிக்கொண்டுள்ளோம். அதுதான் இப்போதும் நடந்துள்ளது / நடக்கிறது. ஆகையால் இதுவொன்றும் முற்றலும் புதிய விஷயம் அல்ல. எது புதிய விஷயமென்றால்.. ரீசார்ஜ் விலை உயர்விற்கு பின்னால் அடுக்கடுக்காக அறிவிக்கப்படும் சலுகைகள் தான் புதியது!

அப்படியாக விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியாவின் ஸ்பெஷல் ஆபர் (Special Offer from Vodafone Idea) ஒன்றை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். கூடவே வேறு என்னென்ன நிறுவனங்கள் என்னென்ன சலுகைகளை அறிவித்துள்ளன என்பதை பற்றியும் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

Vodafone-ன் டபுள் டேட்டா ஆபர்.. பாதிக்கு பணம் கொடுத்தா போதும்!

ஏர்டெல் மற்றும் ஜியோவை தொடர்ந்து தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை அதிகரித்த வோடாபோன் ஐடியாவானது ரூ.50 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு டேட்டா வவுச்சர் மீது டபுள் டேட்டா ஆபரை வழங்குகிறது. நாம் இங்கே பேசுவது ரூ.48 மதிப்புள்ள திட்டத்தை பற்றித்தான்.

வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ரூ.48 டேட்டா பிளான் ஆனது 3ஜிபி வழக்கமான டேட்டா + 3ஜிபி இலவச டேட்டா என மொத்தம் 6ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. 3 நாட்கள் என்கிற டேட்டா வேலிடிட்டி (Data Validity) உடன் வரும் இந்த திட்டத்திற்கு சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity) எதுவும் கிடையாது. அதாவது ரூ.48-ன் கீழ் கிடைக்கும் 6ஜிபி டேட்டாவை 3 நாட்களுக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

சமீபத்தில், போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை உயர்வால் அவதிப்படும் இந்திய மக்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ஹை-ஸ்பீட் இண்டர்நெட் சேவையின் கீழ் மான்சூன் டபுள் தமாகா ஆபர் (Monsoon Double Bonanza Offer) என்கிற லிமிடெட்-டைம் ஆபரை (Limited-Time Offer) அறிவித்து இருந்தது.

இந்த புதிய சலுகையின் கீழ், சந்தாதாரர்கள் இப்போது மாதத்திற்கு வெறும் ரூ.399 ஃபைபர் பேஸிக் திட்டத்தை பெறலாம். இந்த திட்டத்தின் வழக்கமான விலை ரூ.499 ஆகும். அதாவது இந்த திட்டம் ரூ.100 விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல்-ன் இந்த மான்சூன் டபுள் தமாகா ஆபரின்கீழ் ஃபைபர் பேஸிக் பிளான் ஆனது முதல் மாதத்தில் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

இந்த சலுகை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் (FTTH) சேவையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய இண்டர்நெட் கனெக்ஷனை மாற்ற அல்லது அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த லிமிடெட்-டைம் ஆபரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பார்தி ஏர்டெல் நிறுவனமும் கூட புதிய கஸ்டமர்களை ஈர்க்க தனது எக்ஸ்ட்ரீம் பைபர் சேவையின் கீழ் 2 வகையான இலவசங்களை - இலவச வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router) மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் (Free installation). இவ்விரு இலவசங்களையும் பெற வாடிக்கையாளர்கள் அரையாண்டு திட்டம் அல்லது வருடாந்திர திட்டத்தை (Semi-annual plan or Annual plan) தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

அப்போது தான் நிறுவனத்திடமிருந்து இலவச வைஃபை ரூட்டரை பெறுவதற்கும், இலவச நிறுவலுக்கும் தகுதியுடையவர்கள் ஆவீர்கள். மலிவு விலையில் மற்றும் உயர்தர இண்டர்நெட் அனுபவத்தை (High Quality Internet Experience) வழங்கும் பிராட்பேண்ட் கனெக்ஷனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல் (Airtel) உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Double Data Offer on Vodafone Idea Rs 48 Plan Get 6GB with 3 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X