Home
News

எல்லாம் முடிஞ்சது! புது SIM கார்டு ரூல்ஸ்.. உங்க பெயரில் வாங்கிய சிம்-ஐ வேறு நபர் யூஸ் பண்ணா? DoT இறக்கிய இடி!

டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) ஆனது ஒருவருடைய பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டு ஆனது சைபர் மோசடி அல்லது பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த மொபைல் நம்பருக்கு சொந்தமான சந்தாதாரர்கள் அதற்கு பொறுப்பேற்கப்படலாம் என்று கூறியுள்ளது.

மேலும் இது குறித்த அறிக்கையில் - இந்திய குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், சேதப்படுத்தப்பட்ட ஐஎம்இஐ எண்களை கொண்ட மொபைல் போன்களை (Mobile devices with tampered IMEI numbers​) பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிவுறுத்தி உள்ளது.

உங்க பெயரில் வாங்கிய சிம்-ஐ வேறு நபர் யூஸ் பண்ணா? DoT இறக்கிய இடி!

மோடம்கள், மாட்யூல்கள், கட்டமைக்கக்கூடிய அல்லது சேதப்படுத்தப்பட்ட ஐஎம்இஐ நம்பர்களை கொண்ட சிம் பாக்ஸ்கள் போன்ற கொள்முதல் செய்யப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட டிவைஸ்களை வாங்குதல் அல்லது பயன்படுத்துதல்; போலி ஆவணங்கள், மோசடி அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டுகளை வாங்குதல்; மற்றும் அவர்களின் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்தக்கூடிய மற்றவர்களுக்கு மாற்றுதல் அல்லது ஒப்படைத்தல் ஆகியவற்றிற்கு எதிராகவும் டாட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாற்றப்பட்ட ஐஎம்இஐ எண்களை கொண்ட டிவைஸ்களை பயன்படுத்துவது, மோசடியான வழிகளில் சிம் கார்டுகளை வாங்குவது அல்லது சைபர் மோசடிக்காக தங்கள் சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு மாற்றுவது அல்லது வழங்குவது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று டாட் கூறியுள்ளது

மேலும் தங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் பின்னர் தவறாக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், அசல் பயனரும் குற்றவாளியாகக் கருதப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலிங் லைன் ஐடென்டிட்டி (Calling Line Identity - CLI) அல்லது பிற தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை மாற்றியமைக்கும் மொபைல் ஆப்கள் அல்லது வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று சந்தாதாரர்களுக்குத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சட்டம், 2023 (Telecommunications Act 2023) ஆனது மொபைல் போன்கள் மற்றும் பிற டிவைஸ்களின் ஐஎம்இஐ (International Mobile Equipment Identity) நம்பர் உள்ளிட்ட தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை சேதப்படுத்துவதற்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் விதிகளை கொண்டு உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ₹50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த சட்டத்தைத் தவிர, தொலைத்தொடர்பு (தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு) விதிகள் 2024 ஆனது - எந்தவொரு நபரும் ஐஎம்இஐ நம்பரை மாற்றுவதையோ அல்லது ஐஎம்இஐ-ஐ உள்ளமைக்கவோ கூடிய உபகரணங்களைப் பயன்படுத்துவதையோ, தயாரிப்பதையோ அல்லது வைத்திருப்பதையோ தடை செய்கிறது.

டாட் (DoT) ஆனது குடிமக்களுக்கு, டிவைஸின் பிராண்ட் பெயர், மாடல் மற்றும் உற்பத்தியாளர் தகவல்களைக் காண்பிக்கும் சஞ்சார் சாத்தி போர்டல் (Sanchaar sathi portal) அல்லது சஞ்சார் சாத்தி மொபைல் ஆப் (Sanchaar sathi Mobile app) மூலம் ஐஎம்இஐ விவரங்களை சரிபார்க்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது. அறியாதோர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் சஞ்சார் சாத்தி முயற்சி ஆனது குடிமக்கள் தங்கள் மொபைல் இணைப்புகளை சரிபார்த்து பாதுகாக்க உதவும் டிஜிட்டல் டூல்களை (Digital Tools) வழங்குகிறது.

தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கவும், அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் கடுமையான சோதனைகளை மேற்கொண்டுள்ளது என்று டாட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
DoT says if someone misuse the SIM card you bought in your name you are liable for it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X