Home
News

WhatsApp-க்கு சல்யூட்.. இனி ஆன்லைன் ஸ்கேம், ஸ்பேம் கதை முடிஞ்சது.. DoT-க்கு கூடுதலாக ஒரு கை.. மெட்டா உறுதி!

ஆன்லைன் ஸ்கேம் (Online Scams) மற்றும் ஸ்பேம் (Spam) போன்ற டிஜிட்டல் ஸ்கேம்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மெட்டா நிறுவத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) ஆனது தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) உடன் இணைந்து செயல்படுகிறது. ஸ்கேம் சே பச்சோ (Cam Se Bacho) என்னும் பாதுகாப்பு பிரச்சாரத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதை இந்த கூட்டு முயற்சி உறுதிப்படுத்துகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

ஆன்லைன் ஸ்கேம் எதிர்ப்பு, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் தொலைத்தொடர்புத் துறை பல்வேறு திட்டங்களை கொண்டுவருகிறது. தொலைத்தொடர்பு டெக்னாலஜிகளை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகளை தடுக்கவும், அது தொடர்பாக புகார் அளிக்க செய்யவும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

WhatsApp-க்கு சல்யூட்.. இனி ஆன்லைன் ஸ்கேம், ஸ்பேம் கதை முடிஞ்சது!

இப்போது, மெட்டா நிறுவனத்துடன் கை கோர்த்து ஆன்லைன் ஸ்கேம்களுக்கு எதிரான திட்டங்களை தீட்டி இருக்கிறது. தலைமை உலகளாவிய விவகார அதிகாரி மெட்டா, ஜோயல் கப்லான் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இருவரும், நேற்று (மார்ச் 17) சந்தித்து இந்த பார்ட்னர்ஷிப்பை உறுதிப்படுத்தினர்.

இந்த பார்ட்னர்ஷிப் மூலம் ஆன்லைன் ஸ்கேம் மற்றும் ஸ்பேம் போன்ற டிஜிட்டல் மோசடிக்களுக்கு எதிரான பயிற்சி பட்டறைகள் மற்றும் குடிமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட இருக்கின்றன. ஏற்கவே, தொலைத்தொடர்பு துறையின் கீழ் டிஜிட்டல் மோசடிகள் குறித்து புகார்கள் அளிக்கும்படியான சேவை சஞ்சார் சாதி (Sanchar Saathi) மூலம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வாட்ஸ்அப் உதவ இருக்கிறது. பயிற்சி பட்டறைகள் மற்றும் குடிமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மட்டுமல்லாமல், வாட்ஸ்அப் மூலம் நேரடியாக விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் புகார்களை பகிர்த்தல் போன்றவற்றை இது உறுதிப்படுத்த இருக்கிறது.

WhatsApp-க்கு சல்யூட்.. இனி ஆன்லைன் ஸ்கேம், ஸ்பேம் கதை முடிஞ்சது!

இந்த சேவைகளை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், இந்தி, பெங்காலி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் குஜராத்தி போன்ற பிராந்திய மொழிகளிலும் கிடைக்கும்படி தொலைத்தொடர்புத் துறை திட்டங்களை கொடுக்க இருக்கிறது. ஸ்கேம் சே பச்சோ என்னும் பிரச்சாரம் மூலம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது.

இதுகுறித்து ஜோயல் கப்லான் கூறுகையில், ஆன்லைன் மோசடிகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு அவர்கள் எதில் கவனமாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ஆகவே, மோசடி செய்பவர்களுக்கு முன்பாகவே மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை கொடுக்க வேண்டி இருக்கிறது.

இதை வழங்க மெட்டா நிறுவனம் அதிக முதலீடு செய்கிறது. ஆகவே, குடிமக்கள் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தின் உறுதிப்பாடுடன் இப்போது கை கோர்த்து எங்களுடனை தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் இந்தியர்களுக்கு கொடுக்க இருக்கிறோம் என்று விளக்கினார். இந்த நேரத்தில் சஞ்சார் சாதி எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

சஞ்சார் சாதி சேவையானது போர்டல் மற்றும் ஆப் மூலமும் கிடைக்கிறது. டிஜிட்டல் மோசடிகள் குறித்து புகார்களை (ஸ்பேம் கால்/ஸ்பேம் எஸ்எம்எஸ்) அளிக்கலாம். மொபைல் இணைப்புகளை அறியலாம். தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல் எண்களை பிளாக் செய்யலாம் அல்லது கண்டறியலாம். இதுபோன்ற பல்வேறு சேவைகளை கொடுக்கிறது.

ஆனால், மக்களிடையே இந்த சேவைகள் மற்றும் எப்படி புகார் அளிப்பது போன்ற விழிப்புணர்புகள் குறைவாக இருக்கின்றன. ஆகவே, இதை வாட்ஸ்அப் மூலம் கொண்டு சேர்க்க தொலைத்தொடர்பு துறை முடிவெடுத்து அதற்கான வேலைகளை பார்த்து வருகிறது. ஆகவே, டிஜிட்டல் மோசடிகளில் சிக்குவதற்கு முன்பாகவே அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
DoT Partnered With WhatsApp To Extend Campaign Against Online Scams and Spam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X