Corona தாக்கம் மே 3 வரை அனைவருக்கும் இலவச இண்டர்நெட்? -PIB அளித்த பதில்!

|

Corona வைரஸ் தாக்கத்தின் காரணமாக வொர்க் ப்ரம் ஹோம் செய்பவர்களுக்கு மே 3 ஆம் தேதி வரை இலவச இணையதளம் என்று பரவிய வதந்திக்கு பிஐபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயம்

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயம்

கொரோனா அச்சம் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் உள்ளது. இதையடுத்து இந்தியாவில் பிரதமர் மோடி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அறிவித்தார். இதையடுத்து அத்தியாவசிய தேவைக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அரசு பல நடவடிக்கை

அரசு பல நடவடிக்கை

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் வைரலாக பல்வேறு போலி செய்திகள் பரவிக் கொண்டே வருகின்றன. இதை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கை எடுத்தாலும், முன்னதாக பரவிய வதந்திகளை மக்கள் நம்பிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!

கொரோனா வைரஸ் குறித்த ஏராளமான வதந்திகள்

கொரோனா வைரஸ் குறித்த ஏராளமான வதந்திகள்

எடுத்துக்காட்டாக தற்போது இருக்கும் சூழ்நிலையின் படி கொரோனா வைரஸ் குறித்த ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. தாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டது, கொரோனாவுக்கு இதான் மருந்து, இது செயல்படும் இது செயல்படாது என தொடர்ச்சியாக வதந்திகள் பரவிக் கொண்டே வருகின்றன.

இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு

இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு

அதேபோல் கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூகவலைதளம் போலி தகவல்களை பரப்பும் பிரதான இடமாக மாறி வருகிறது. அதில் ஒன்றுக்கு தான் தற்போது பிஐபி விளக்கமளித்துள்ளது.

அனைத்து பயனர்களுக்கும் இலவச இணைய சேவை

அனைத்து பயனர்களுக்கும் இலவச இணைய சேவை

2020 மே 3 ஆம் தேதி வரை தொலைதொடர்புத் துறை அனைத்து பயனர்களுக்கும் இலவச இணையத்தை வழங்குவதாக பரவியது, ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

எந்த உண்மையும் இல்லை

எந்த உண்மையும் இல்லை

ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை, புதன்கிழமை (ஏப்ரல் 22) அரசு நடத்தும் பிரசர் பாரதி செய்தி சேவைகள், கூற்றுக்கு மேற்கோள் காட்டப்பட்ட உத்தரவு போலியானது மற்றும் இணைப்பு மோசடி என தெளிவுபடுத்தியது. இணையத்தில் ஒரு லிங்க் பரவியது இதை கிளிக் செய்வதன் மூலம் இலவச இணையதள சேவையை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Cognizant நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா? சைபர் அட்டாக்.! work from home காரணமா?Cognizant நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா? சைபர் அட்டாக்.! work from home காரணமா?

 PIB தரப்பில் அறிவிப்பு

PIB தரப்பில் அறிவிப்பு

கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வீட்டிலிருந்து வேலை செய்ய 2020 மே 3 ஆம் தேதி வரை தொலைத் தொடர்புத் துறை அனைத்து பயனர்களுக்கும் இலவச இணையத்தை வழங்கவில்லை. இந்த தகவல் போலியானது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என PIB தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: aninews.in

Best Mobiles in India

English summary
Dot not providing free internet to users: PIB

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X