Home
News

புது Mobile வாங்குறீங்களா STOP.. உடனே இதை பண்ணாம வாங்காதீங்க.. DoT போட்ட ரூல்.. இனிமே KYM சோதனை கட்டாயம்!

தொலைதொடர்பு துறை, டிஓடி (Department of Telecommunications, DoT) ஆனது ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும், இனிமேல் புதிய ஸ்மார்ட்போன் வாங்க இருக்கும் கஸ்டமர்களுக்கும் கேஒய்எம் (KYM) என்று அழைக்கப்படும் உங்கள் மொபைல் அறிதல் (Know Your Mobile) செயல்முறை கொண்டுவந்துள்ளது. இதை பயன்படுத்தி ஸ்மார்ட்போனின் உண்மைத்தன்மையை சரிபார்க்க சொல்லி இருக்கிறது.

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களுக்கும் ஐஎம்இஐ (IMEI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (International Mobile Equipment Identity) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நம்பர் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் மாறும். ஆகவே, ஒரு ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்ட ஐஎம்இஐ நம்பர் மற்ற ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்படாது.

புது Mobile வாங்குறீங்களா STOP.. உடனே இதை பண்ணாம வாங்காதீங்க.. ரூல்ஸ்!

ஆகவே, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஐஎம்இஐ நம்பர் அல்லது ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் பதிவு செய்யப்படாத ஐஎம்இஐ நம்பர்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். ஏற்கனவே, தொலைதொடர்பு துறை ஆனது ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பிழையில்லாத ஐஎம்இஐ நம்பர்களை ஒதுக்க வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.

அதேபோல ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்துவோருக்கும் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. ஏனென்றால், தொலைத்தொடர்பு சட்டம், 2023 இன் கீழ், மாற்றப்பட்ட அல்லது அங்கீகாரமற்ற ஐஎம்இஐ (IMEI) நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது தண்டனைக்கு உரியதாகும். ஆகவே, ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்பு ஐஎம்இஐ நம்பரை செக் செய்யுங்கள்.

ஏற்கனவே, ஸ்மார்ட்போன் இருந்தாலும் அதனுடைய ஐஎம்இஐ நம்பரை வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். முதலில் உங்களது ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை தெரிந்து கொள்ள வேண்டும். இது ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்ட பாக்ஸில் இருக்கும். இல்லையென்றால், *#06# எண்ணை டைப் செய்து செய்தால் போதும், ஐஎம்இஐ நம்பர் காண்பிக்கப்படும்.

இந்த நம்பரை கேஒய்எம் வெரிபிகேஷன் செய்து, அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா அல்லது டேம்ப்பர் (சேதப்படுத்தப்பட்டதா) அல்லது மாற்றப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற நம்பர்கள் பிளாக் லிஸ்ட்டில் இருக்கும்பட்சத்தில் அது தண்டனைக்குரியதாகும். மற்ற நம்பர்களில் வழக்கமாக ஸ்மார்ட்போன் மாடல், பிராண்ட் மற்றும் உற்பத்தியாளர் உள்ளிட்ட விவரங்களை கொண்டிருக்கும்.

கேஒய்எம் வெரிபிகேஷன் செய்ய மூன்று வழிகள் உள்ளன:

1. உங்களது மொபைலில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் KYM டைப் செய்து 14422 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

2. சஞ்சார் சாதி மொபைல் செயலி - ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மாடல்களுக்கு பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

3. வெப் போர்டல் - CEIR (Central Equipment Identity Register) இணையதளம் மூலம் (ceir.gov.in) IMEI வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம்.

ஆகவே, எஸ்எம்எஸ் மூலமாக வெரிபிகேஷன் செய்துகொள்ள முதலாவது வழியை பின்பற்றுங்கள். உங்களிடம் சஞ்சார் சாதி மொபைல் செயலி (Sanchar Saathi Mobile App) இருந்தால், நேரடியாத அதில் கேஒய்எம் வெரிபிகேஷன் செய்து கொள்ளுங்கள். மூன்றாவது வழியாக வெப் போர்டல் இருக்கிறது. இதில் எப்படி வெரிபிகேஷன் செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சிஇஐஆர் (CEIR) போர்டலுக்கு செல்லுங்கள். கீழே ஸ்க்ரோல் செய்தால், உங்கள் மொபைல் போனின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளுங்கள் (Know Genuineness of Your Mobile Handset) விருப்பம் தோன்றும். இதற்கு வலது பக்கத்தில் வெப் போர்ட்டல் விருப்பம் இருக்கும். இதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். கேப்ச்சா கோட் மற்றும் மொபைல் நம்பர் கேட்கப்படும்.

இதை கொடுத்த பிறகு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டும். இந்த ஓடிபி நம்பரை கொடுத்த பிறகு, ஐஎம்இஐ நம்பர் கேட்கப்படும். இதை கொடுத்தால், உங்களது மொபைலின் பிராண்ட் பெயர், மாடல் பெயர், உற்பத்தியாளர் பெயர், சந்தைப்படுத்தல் பெயர் மற்றும் டிவைஸ் வகை ஆகியவை காண்பிக்கப்படும். இதெல்லாம் வந்தால், பிரச்சனை கிடையாது. பிளாக் லிஸ்டில் இருந்தால் குற்றமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
DoT KYM Verification How to Check Your Mobile Phone Authenticity Check Your IMEI Number Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X