யூ.பி.எஸ்.சி இணையதளத்தைச் செய்த ஹேக்கர்கள்.! பிரதமர் டிவிட்டர் பக்கத்தில் குவிந்த மக்கள் ட்வீட்.!

இந்திய அரசுக்குச் சொந்தமான www.upsc.gov.in இணையதளம் ஹேக்கர்களால் நேற்று ஹேக் செய்யப்பட்டது.

|

என்னடா இது டிஜிட்டல் இந்தியாவிற்கு வந்த சோதனை. அண்மையில் ஆதார் ஆணையத்தின் தலைவர் ஆதார் விபரங்கள் ஹேக்கர்களால் வெளிப்படையாக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது, அதை நாம் அனைவரும் அறிவோம். இன்னும் அந்தச் சர்ச்சையே முடிவுக்கு வராத நிலையில். அடுத்த ஹேக்கிங் சம்பவம் நேற்று நடைபெற்றிருக்கிறது.

இந்திய அரசைக் குறிவைத்து தாக்கும் இந்த ஹேக்கர்களுக்கு உண்மையில் என்னதான் வேண்டுமென்று அரசாங்கத்திற்கே புரியவில்லை. நேற்று இந்திய அரசு இயக்கிவரும் யூ.பி.எஸ்.சி. இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

யூ.பி.எஸ்.சி இணையதளம்

யூ.பி.எஸ்.சி இணையதளம்

நேற்று இரவு பயனர்கள் யூ.பி.எஸ்.சி இணையதளத்தைப் பயன்படுத்த முயற்சித்த போது, யூ.பி.எஸ்.சி இணையதளம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்தனர், அரசுக்கு இந்தச் செய்தியை சொல்ல மக்கள் சமூகவலைத்தளத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் தேர்வுகள்

மத்திய அரசின் தேர்வுகள்

இந்திய அரசுக்குச் சொந்தமான www.upsc.gov.in இணையதளம் ஹேக்கர்களால் நேற்று ஹேக் செய்யப்பட்டது. யூனியன் பப்ளிக் செர்வீஸ் ஆணையம், மத்திய அரசின் பல்வேறு இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் மற்றும் பல துறைகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுக்கம் தேர்வுகளை நடத்தி வருகிறது.

"டோரேமொன்!!!!பிக் அப் தி கால்"

ஹேக் செய்யப்பட்ட யூ.பி.எஸ்.சி. இணையதளத்தில் "டோரேமான்" இன் கார்ட்டூன் படத்துடன் "டோரேமொன்!!!!பிக் அப் தி கால்" என்ற ஒரு படத்தை ஹேக்கர்கள் இந்திய அரசின் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்பொழுது யூ.பி.எஸ்.சி. இணையதளம் இந்தச் செய்தியை மட்டும் தெரிவிக்கிறது "வலைத்தளம் பராமரிப்பு கீழ் உள்ளது!".

நள்ளிரவில் ட்வீட்

நள்ளிரவில் ட்வீட்

இந்த ஹேக்கிங் சம்பவம் பற்றிய தகவல்களை மக்கள் படம் பிடித்து பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர். அதிலும் சில மக்கள் நள்ளிரவில் கூட பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர். யூ.பி.எஸ்.சி-2018 தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையம் வழி பெறுவதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நாளிலேயே இணையதளம் ஹேக் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இணையதளங்கள் ஹேக்

அரசின் இணையதளங்கள் ஹேக்

இதற்கு முன்னர் இந்திய அரசின் உச்சநீதிமன்ற இணையதளம் supremecourtofindia.nic.in பிரேசில் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகம் போன்ற பல அரசுத் துறை சார்ந்த இணையதளங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Doraemon Pick Up the Call UPSC Website Hacked Displays Photo of Cartoon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X