Home
News

TV கதை முடிந்தது.. வெறும் ரூ.399 போதும்.. 3 மாத வேலிடிட்டி.. 300+ சேனல்கள்.. 20+ ஓடிடி சந்தா.. Dor Play ஆப்!

டிவியில் லைவ் டிவி, ஓடிடி ஆப்களை பார்த்துவரும் கஸ்டமர்களை ஒட்டுமொத்தமாக அடிமட்ட பட்ஜெட்டில் இழுக்கும்படி வெறும் ரூ.399 திட்டத்தில் 300+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட் போன்ற ஆப்கள் அடங்கிய 20+ ஓடிடி சந்தாவை டோர் ப்ளே (Dor Play) நிறுவனம் கொடுக்கிறது. ஒரே திட்டத்தில் டிவி சேனல்கள், ஓடிடி, டேட்டா கொடுக்கும் ஜியோ திட்டங்களைவிட மலிவாக கிடைக்கிறது. ஆகவே, விலைக்கு ஏற்ப மொபைலில் மட்டுமே இந்த சந்தாவை பயன்படுத்த முடியும்.

ஓடிடி ஆப்களின் வருகைக்கு பிறகு டிவியில் மூவிக்கள் மற்றும் சிரீஸ்களை பார்ப்பது குறைந்துவிட்டது. ஏனென்றால், மொபைலில் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. இதனை புரிந்துகொண்ட டோர் ப்ளே நிறுவனம், ஒரே ஆப் மூலம் ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்களையும கொடுக்க திட்டமிட்டது. இப்போது, ரூ 399 திட்டத்தை களமிறக்கி இருக்கிறது.

TV கதை முடிந்தது.. ரூ.399 போதும்.. 3 மாத வேலிடிட்டி.. 300+ சேனல்கள்!

டோர் ப்ளே ரூ 399 திட்ட விவரங்கள் (Dor Play Rs 399 Plan Details): இந்த டோர் ப்ளே திட்டத்தில் 3 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆகவே, 90 நாட்களுக்கு லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். இதில் 300+ லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. 20+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்தலாம். எந்தெந்த சந்தா கிடைக்கிறது.

இந்த டோர் ப்ளே திட்டத்தில் டிஸ்னிபிளஸ் ஹார்ட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (Zee5), சோனிலிவ் (Sony LIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சன்நெக்ஸ்ட் (Sun Nxt), ஆஹா (Aha), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), ஃபேன்கோட் (Fancode), ஈடிவி வின் (ETV Win), சாவ்பால் (Chaupal), டோலிவுட் பிளே (Dollywood Play), நம்மபிளிக்ஸ் (Nammaflix) மற்றும் ஷீமாரூமீ (ShemarooMe) ஆகிய சந்தா உள்ளது.

மேலும், ஸ்டேஜ் (Stage), சன்நெக்ஸ்ட் (Sun NXT), டிராவல் எக்ஸ்பி (TravelXP), ராஜ் டிவி (Raj TV), விஆர் ஓடிடி (VR OTT), பிளேபிளிக்ஸ் (Playflix), ஓடிடி பிளஸ் (OTT Plus) மற்றும் டிஸ்ட்ரோ டிவி (DistroTV) ஆகிய சந்தாவும் கிடைக்கின்றன. இந்த டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தாவை மொபைலில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக டோர் ப்ளே ஆப் (Dor Play App) கிடைக்கிறது.

இதை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் (Apple Store) டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த டோர் ப்ளே திட்டம் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்கிறது. கூப்பனாக கிடைக்கும் இந்த சந்தாவை உங்களது மொபைல் நம்பரில் இணைத்து கொள்ளலாம். அதன்பிறகு டோர் ப்ளே ஆப்பில் அதே மொபைல் நம்பரை லாகின் செய்து ஓடிடி மற்றும் டிவி சேனல்களை பெறலாம்.

இது மொபைலுக்கு மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் திட்டமாகும். ஆகவே, டிவி, டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற டிவைஸ்களில் பயன்படுத்த முடியாது. இதேபோல பல்வேறு திட்டங்கள் அடுத்தடுத்து வரும் என்று டோர் ப்ளே தெரிவித்திருக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கும் இதேபோல ஒரே ஆப் மூலம் 20+ ஓடிடிகளின் சலுகையை கொடுக்கின்றன.

ஆனால், அவற்றில் லைவ் டிவி சேனல்களின் சலுகை கிடைக்காது. இருப்பினும், ஜியோ நிறுவனம் அதனுடைய ஜியோ டிவி ஆப் மூலம் பல்வேறு லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது. ஆனால், இதற்கு ஜியோ டிவி பிரீமியம் சந்தாவை பெற வேண்டும், இந்த பிரீமியம் திட்டங்களும் ரூ.398 முதல் தொடங்குகின்றன. ஆனால், அவற்றில ஓடிடி ஆப்களை பெற்று கொள்ள முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Dor Play Rs 399 Plan With 300 Live TV Channels 20 OTT Apps 3 Months Validity Mobile Only Service
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X