கேபிள் TV இல்ல.. DTH இல்ல.. இனி ஸ்மார்ட்போன் போதும்.. மாசத்துக்கு ரூ.133-க்கு வருது 3 மாதம்.. 300+ டிவி சேனல்!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு நிகராக அடிமட்ட விலைக்கு 300+ லைவ் டிவி சேனல்கள், 20+ ஓடிடி ஆப்களின் சந்தாவை டோர் ப்ளே (Dor Play) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.133 செலவில் 3 மாதங்களுக்கு சந்தாவை கொடுப்பதால், டெலிகாம் மார்கெட்டை மிரள விட்டுள்ளது. ஒரேவொரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் இந்த சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் சந்தாவின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேபிள் டிவி அல்லது டிடிஎச் பாக்ஸ் மூலம் லைவ் டிவி சேனல்களை பார்க்கும் காலம் மாறிவருகிறது. ஒரேவொரு ஸ்மார்ட்போன் ஆப் மூலம் லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தும்படி திட்டங்கள் வந்துவிட்டன. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி டோர் ப்ளே நிறுவனத்தின் ரூ.399 திட்டம் கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு 3 மாதங்கள் சந்தா கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு வெறும் ரூ.133 செலவில் இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். இவ்வளவு மலிவான விலைக்கு கிடைப்பதால், இந்த டோர் ப்ளே சலுகைகளை ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தை பெற்ற பிறகு உங்களது நம்பர் மூலம் லாகின் செய்தால் போதும் சலுகைகள் கிடைக்கிறது.
டோர் ப்ளே ரூ 399 திட்டம் (Dor Play Rs 399 Plan): இந்த திட்டத்தை பெறுவதற்கு ஓடிடி ஆப்களை போலவே சந்தா கட்ட வேண்டி இருக்கிறது. அதாவது, இதை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஸ்டோரில் (Apple Store) கிடைக்கும் டோர் ப்ளே ஆப்பை டவுன்லோட் செய்துவிட்டு, அந்த ஆப் மூலம் ரூ.399 சந்தா செலுத்தினால் போதுமானது. உங்களுக்கான சலுகைகள் ஆக்டிவேட் செய்யப்படும்.

இந்த சந்தாவுக்கு 3 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் 300+ லைவ் டிவி சேனல்களை (Live TV Channels) பார்த்து கொள்ளலாம். இந்த லைவ் டிவி சேனல்களுக்கு அடுத்தபடியாக 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இதில் டிஸ்னிபிளஸ் ஹார்ட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (Zee5) மற்றும் சோனிலிவ் (Sony LIV) போன்ற முன்னணி சந்தா இருக்கிறது.
மேலும், ஃபேன்கோட் (Fancode), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), சன்நெக்ஸ்ட் (Sun Nxt), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win), டோலிவுட் பிளே (Dollywood Play), நம்மபிளிக்ஸ் (Nammaflix) மற்றும் சாவ்பால் (Chaupal) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோக, சன்நெக்ஸ்ட் (Sun NXT) கிடைக்கிறது.
அதேபோல, ஸ்டேஜ் (Stage), ராஜ் டிவி (Raj TV), விஆர் ஓடிடி (VR OTT), பிளேபிளிக்ஸ் (Playflix) மற்றும் டிராவல் எக்ஸ்பி (TravelXP) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த டோர் ப்ளே ஆப் ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்தும்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் ஸ்மார்ட்டிவிகளிலும் பயன்படுத்த கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆகவே, கேபிள் டிவி, டிடிஎச் போன்று வழக்கமாக நாம் பயன்படுத்தி வரும் முறைகள் ஆப்களுக்கு மாற வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த நிறுவனத்தை போலவே ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் லைவ் டிவி சேனல்களை கொடுத்தால், எளிதாக டெலிகாம் கஸ்டமர்களை ஆப்களுக்கு மாற்றிவிட முடியும். பொறுத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








