இண்டர்நெட் இல்லாமல் மொபைலில் டிவி சேவை சென்னையில் தூர்தர்ஷன் அறிமுகம்.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் பயனர்களை ஈர்க்கும் விதமாக மொபைல் போன்களில் இலவச தொலைகாட்சி சேவையை வழங்க தூர்தர்ஷன் முடிவு செய்துள்ளது. அதன் படி சென்னை உள்ளிட்ட 15 நகரங்களில் இந்த சேவை வழங்கப்படுகின்றது.

பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி துவங்கிய இந்த சேவையானது சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி, பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், இந்தூர், கட்டாக், லக்னோ, அவுராங்காபாத், போபால், பெங்களூர், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகின்றது.

மொபைல் டிவி

மொபைல் டிவி

ஓ.டி.ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்ளெட் கருவிகளில் டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் DVB-T2 டாங்கிள் அல்லது வை-பை டாங்கிள்களை பயன்படுத்தி தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண முடியும்.

டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங்

டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங்

இந்த டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் கருவியானது பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கின்றது.

மென்பொருள்

மென்பொருள்

வாடிக்கையாளர்கள் தேவையான மென்பொருளை பதிவிறக்கம் செய்து, டாங்கிள்களை ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் கருவிகளில் பொருத்தி தூர்தர்ஷன் சிக்னல்களை பெற முடியும்.

இலவசம்

இலவசம்

தூர்தர்ஷன் சேனல்களை பார்க்க எவ்வித கட்டணமும் கிடையாது. மேலும் மென்பொருளை இன்ஸ்டால் செய்த பின் இண்டர்நெட் சேவையும் தேவையில்லை.

முதலீடு

முதலீடு

தற்சமயம் டிடி நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி ரீஜினல், டிடி கிசான் போன்ற சேனல்களை கண்டு ரசிக்க முடியும். மேலும் ஒரு முறை டாங்கிள் வாங்கினால் போதும், அதன் பின் இண்டர்நெட் உதவியின்றி சேனல்களை பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
Doordarshan starts free TV services for mobile phones Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X