ஸ்டைலா, கெத்தா, முரட்டுத்தனமா ஒரு ஸ்மார்ட்போன்- பேட்டரி மட்டும் 8500 எம்ஏஎச் பவர்: விலை என்ன தெரியுமா?
Doogee V10 5G ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பேட்டரி, சக்தி வாய்ந்த கேமரா உள்ளிட்ட அம்சங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள், சிறந்த அம்சங்கள், விலை குறித்து பார்க்கலாம்.

டூகி தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டூகி தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. டூகி அறிமுகம் செய்துள்ள இந்த 5ஜி ஸ்மார்ட்போனானது டூகி வி10 என பெயரிடப்பட்டுள்ளது. Doogee V10 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் பேட்டரி மற்றும் அதன் முரட்டுத்தனமான வடிவமைப்பு ஆகும். Doogee V10 5G ஸ்மார்ட்போனில் 8500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதோடு இதன் பாக்ஸில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இணைக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான முரட்டுத்தனமான வடிவமைப்பு
டூகி வி 10 சாதனமானது சுவாரஸ்யமான முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த விவரக்குறிப்புகளை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் தனிப்பயனாக்கக்கூடிய பட்டன்கள் மற்றும் ஆற்றல் பட்டன், வால்யூம் ராக்கர்ஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் இதில் பாதுகாப்பு அம்சத்துக்கு என வலதுபுறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி திறன்கள் இருக்கிறது.

Doogee V10 5G விவரக்குறிப்புகள்
Doogee V10 5G விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் எச்டி பள்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்போடு வருகிறது. டிஸ்ப்ளேவின் மேல் இடது மூலையில் ஒரு செல்பி கேமரா அம்சத்தோடு வருகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி
இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் வருகிறது. இது 7 என்எம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்டோகோர் செயலி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் அம்சம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

பின்புறத்தில் மூன்று கேமரா வடிவமைப்பு
Doogee V10 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு முன்புறத்தில் ஒற்றை கேமரா அம்சம் இருக்கிறது. பின்புற கேமரா அம்சத்தை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா என மூன்று கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா இருக்கிறது.

5ஜி இணைப்பு ஆதரவு
இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம் இதில் உள்ள பேட்டரி, இந்த ஸ்மார்ட்போனில் 8500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. மேலும் இணைப்பு ஆதரவுகளாக என்எஃப்சி, கேமிங் வைஃபை ஆண்டெனா, ஐபி68 மற்றும் ஐபி 69கே ரேட்டிங், 5ஜி இணைப்பு ஆதரவு ஆகியவை உள்ளன.


Click it and Unblock the Notifications