அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?

|

ஸ்மார்ட்போன்களின் (smartphone) பரிணாம வளர்ச்சி பற்றி நாம் பேசத் துவங்கினால், ஒரு பெரிய செங்கல் சைஸ் போன்ற சாதனத்தில் தோன்றி, இன்று இவை ஒரு கையடக்க ஸ்மார்ட் டிவைஸ் கருவியாக மாறியுள்ளது வரை நாம் பேசிக்கொண்டே இருக்கலாம். முதலில் இவை ஒரு நபர் மற்றொரு நபரை தொடர்புகொள்ள உதவிய ஒரு அழைப்பு கருவியாக மட்டும் பயன்படுத்தப்பட்ட போதிலும், இன்று இவை டச் ஸ்கிரீன், கேமிங், HD டிஸ்பிளே மூவிஸ், கேமரா, வீடியோ ரெக்கார்டிங் என்று பல விதத்தில் பரிணாம வளர்ச்சியை அடைந்து வளர்ந்து வரும் ஒரு கருவியாக மாறிவருகிறது.

கற்பனை செய்து பார்க்க முடியாத புதிய ஸ்மார்ட்போன்கள்

கற்பனை செய்து பார்க்க முடியாத புதிய ஸ்மார்ட்போன்கள்

இன்னும் சரியாகச் சொல்லப் போனால், இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய விஷயங்களை அறிமுகம் செய்யும் டிவைஸ்களுக்கு தான் ஏகபோக மவுசு. இதனால், சமீபத்தில் சில ஸ்மார்ட்போன்களின் டிசைன்களில் கூட இப்போது மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது. இன்னும் சில நிறுவனங்கள், யாரும் இதுவரை கற்பனை செய்து பார்க்க முடியாத சில மாற்றங்களை எல்லாம் கூட இப்போது செய்யத் துவங்கிவிட்டன. அதேபோல், ஸ்மார்ட்போன்களின் திறனையும் நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் மேம்படுத்தி வருகின்றன.

ட்ரெண்டிங் டிஸைனுடன் உருமாறும் ஸ்மார்ட்போன்கள்

ட்ரெண்டிங் டிஸைனுடன் உருமாறும் ஸ்மார்ட்போன்கள்

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், சமீபத்தில் அறிமுகமான Nothing Phone 1 டிவைஸ் மற்றும் புதிய Nokia 5710 XpressAudio டிவைஸை நாம் கூறலாம். நத்திங் போன் 1 டிவைஸ் அதன் டிரான்ஸ்பரென்ட் டிசைனுக்காக வரவேற்கப்பட்டது. அதேபோல், புதிய Nokia 5710 XpressAudio டிவைஸ் போனுக்குள் இயர்போன்களை மறைத்து வைத்து, மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வரிசையில் இப்போது DOOGEE S89 Pro phone அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DOOGEE S89 Pro வேற லெவல் ஸ்மார்ட்போன் தானா?

DOOGEE S89 Pro வேற லெவல் ஸ்மார்ட்போன் தானா?

DOOGEE S89 Pro போன் என்பது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புதிய ரஃடு ஸ்மார்ட்போன் (rugged smartphone) டிவைஸாகும். ரஃடு ஸ்மார்ட்போன் டிவைஸ் என்பது ராணுவ தரத்தில் தயாரிக்கப்படும் மிகவும் கடினமான வகை ஸ்மார்ட்போன் கருவியாகும். இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் பேட்மேன் தீம் உடன் உருவாக்கியுள்ளது. இந்த ரஃடு ஸ்மார்ட்போன் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்குப் பல காரணங்கள் இருக்கிறது என்றாலும் கூட, இதில் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது.

IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்

முதல் முறையாக 12000mah பேட்டரி உடன் ஒரு ஸ்மார்ட்போனா?

முதல் முறையாக 12000mah பேட்டரி உடன் ஒரு ஸ்மார்ட்போனா?

இந்த DOOGEE S89 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ் 12000mah பேட்டரி அம்சத்துடன் வருகிறது. உண்மையில் இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ், 5 நாள் வரை தொடர்ந்து தடையின்றி இயங்கக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. 12000mah பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் இதில் உள்ள மற்ற அம்சங்களும் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய ரஃடு ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்ன?

புதிய ரஃடு ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்ன?

இந்த புதிய ரஃடு ஸ்மார்ட்போன் டிவைஸ் 6.3' இன்ச் அளவு கொண்ட FHD+ உடன் கூட 1,080 x 2,340 பிக்சல் உடைய LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் IP68 மற்றும் IP69K சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் மூலம், இந்த டிவைஸ் வாட்டர் மற்றும் டஸ்ட் நுழைவிற்கு எதிரான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் MIL-STD-810H ரஃடு ஸ்டாண்டர்ட் சான்றிதழையும் பெற்றுள்ளது.

MIL-STD-810H ரஃடு ஸ்டாண்டர்ட் சான்றிதழ் எதற்கானது தெரியுமா?

MIL-STD-810H ரஃடு ஸ்டாண்டர்ட் சான்றிதழ் எதற்கானது தெரியுமா?

அதாவது, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஈரமான பொருட்களில் அல்லது நீரிற்குள்ளே குறைந்தது 30 நிமிடங்களுக்கு முழுமையாக மூழ்கி இருந்தாலும், இந்த சாதனத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை நிறுவனம் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை 1.5 மீ (5 அடி) உயரத்தில் இருந்து கான்கிரீட் மீது நீங்கள் தவறவிட்டால் கூட, இதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை MIL-STD-810H ரஃடு ஸ்டாண்டர்ட் சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது.

அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பட்ஜெட் விலையில் கிடைக்கும் மிரட்டல் சாதனமா இது?

பட்ஜெட் விலையில் கிடைக்கும் மிரட்டல் சாதனமா இது?

இப்படிப் பல அசாத்தியமான அம்சங்களுடன் வரும் இந்த ரஃடு ஸ்மார்ட்போன் டிவைஸ் DOOGEE S89 Pro போன் விலை நிச்சயமாக அதிகமாக தான் இருக்கும் என்று நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால், அது தான் இல்லை. இவை குறைந்த பட்ஜெட் விலையில் கிடைக்கிறது என்பதே மற்றொரு சிறப்பான விஷயமாகும். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக்கின் Helio P90 மிட் ரேஞ்ச் சிஸ்டம்-ஆன்-சிப் உடன் ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது.

512 ஜிபி வரை ஸ்டோரேஜ்-ஆ? இன்னும் என்னவெல்லாம் இருக்கு?

512 ஜிபி வரை ஸ்டோரேஜ்-ஆ? இன்னும் என்னவெல்லாம் இருக்கு?

இந்த ரஃடு ஸ்மார்ட்போன் டிவைஸில் மைக்ரோ எஸ்டி வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் வசதியையும் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் இது ஒரு கையால் திறக்கப்படுவதற்கு ஏற்ற பக்கவாட்டில் பொருத்தப்பட்டபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. இதில் 4G LTE, புளூடூத் 5.0 மற்றும் 802.11n Wi-Fi ஆகியவற்றிற்கான ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா டிசைன் கூட மிகவும் சுவாரசியமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனம் ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் வருகிறது.

டிங்கி ரோபோ வடிவத்தில் கேமரா பம்ப் - இதில் என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

டிங்கி ரோபோ வடிவத்தில் கேமரா பம்ப் - இதில் என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

ஆனால், இவை டிங்கி ரோபோ வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா பம்பில் உள்ள லைட்கள் RGB நிறங்களை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் போனுக்கு உள்வரும் மெசேஜ்கள் அல்லது கால்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன்களின் போது இவை வெவ்வேறு நிறங்களில் ஒளிருகிறது. இந்த டிவைஸ் 64 மெகாபிக்சல் கொண்ட F1.8 பிரைமரி கேமராவையும், சோனியின் IMX350 இமேஜ் சென்சார் அடிப்படையிலான 20 மெகாபிக்ஸல் F1.8 நைட்விஷன் மாட்யூல் மற்றும் 8 மெகாபிக்சல் F2.2 மேக்ரோ சென்சாரையும் கொண்டுள்ளது.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

DOOGEE S89 Pro போன் விலை என்ன? எங்கே வாங்கலாம்?

DOOGEE S89 Pro போன் விலை என்ன? எங்கே வாங்கலாம்?

இந்த ஸ்மார்ட்போன் 12,000mAh பேட்டரி அம்சத்தைப் பெறுகிறது. இது பயனர்களுக்கு நம்ப முடியாத நீண்ட கால பேட்டரி அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 65W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இந்த புதிய ரஃடு ஸ்மார்ட்போன் டிவைஸ் ஜூலை 29 வரை $239.99 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 19,210 மட்டுமே. ஜூலை 29 ஆம் தேதிக்குப் பிறகு இதன் விலை சுமார் $700 என்ற (ரூ. 56,033) விலையில் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதை AliExpress வழியாக சலுகையுடன் நீங்கள் வாங்கவும் வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Doogee S89 Pro Mid Range Rugged Smartphone Packs In A Whopping 12000mAh Battery With Other Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X