பாறை மாதிரி Mobile.. 10,800mAh பேட்டரி.. 2TB மெமரி.. தூக்கி போட்டாலும் Doogee S118 Pro உடையாது.. விலை என்ன?
டூகி (Doogee) நிறுவனம் அதன் மிகவும் உறுதியான ரக்டு ஸ்மார்ட்போன் (rugged smartphone) சாதனங்களின் வரிசையில் புதிதாக டூகி S118 ப்ரோ (Doogee S118 Pro) என்ற லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 10,800mAh திறன் கொண்ட பேட்டரி (battery) உடன் சந்தைக்கு வந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புதிய Doogee S118 Pro Rugged Smartphone மாடலின் விலை, சிறப்பம்ச விபரங்கள் மற்றும் விற்பனை விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான டூகி, அதன் வித்தியசமான ஸ்மார்ட்போன்களின் வரிசையில், புதிய மாடலான Doogee S118 Pro என்ற ரக்டு போனை அறிவித்துள்ளது. இந்த புதிய ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் அணைத்து விதமான கடுமையான வானிலையை தாங்கும் திறன் கொண்டது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மிலிட்டரி கிரேடு தரத்தில் மிகவும் உறுதியான போனாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாறை மாதிரி Mobile.. 10,800mAh பேட்டரி.. 2TB மெமரி.. தூக்கி போட்டாலும் Doogee S118 Pro உடையாது:
Doogee S118 Pro ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் இதற்கு முன்பு டூகி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட Doogee S118 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஸ்மார்ட்போனாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Doogee S118 Pro ஸ்மார்ட் போன் சாதனம் 6.6" இன்ச் அளவு கொண்ட FHD+ டிஸ்பிளேவுடன் (display) வருகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவை வழங்குகிறது.
இந்த Doogee S118 Pro ஸ்மார்ட்போன் சாதனம் 480 நீட்ஸ் பீக் பிராட்டினஸ் (brightness) உடன் வருகிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) உடன் வருகிறது. இது 8GB LPDDR5 ரேம் (RAM) உடன் 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 2TB வரையிலான மைக்ரோ SD கார்டு மெமரி ஆதரவையும் கொண்டுள்ளது.
டூகி S118 ப்ரோ (Doogee S118 Pro):
இந்த புதிய டூகி S118 ப்ரோ (Doogee S118 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 108MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் + 20 MP நைட் விஷன் கேமரா அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவை இந்த சாதனம் கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் டூகி S118 ப்ரோ (Doogee S118 Pro) போன் 32 MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த புதிய லேட்டஸ்ட் டூகி S118 ப்ரோ (Doogee S118 Pro) ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் மிகமிக பெரிய சைஸ் பேட்டரியை கொண்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 10,800mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ MIL-STD-810H மிலிட்டரி கிரேடு தர சான்றிதழை பெற்றுள்ளது.
டூகி S118 ப்ரோ விலை (Doogee S118 Pro Price):
இந்த Doogee S118 Pro Rugged Mobile சாதனம் IP69K, மற்றும் IP68 சான்றிதழை பெற்றுள்ளது. இது கீழே விளைந்தாலும் உடையாத அளவு மிகவும் உறுதியான வடிவமைப்பை பெற்றுள்ளது. அதேபோல், இந்த சாதனம் கடுமையான குளிர், கடுமையான வெப்பம் மற்றும் நீருக்கடியில் கூட இயங்க கூடியது என்று Doogee நிறுவனம் கூறியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 31,172 என்ற விலையில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








