Home
News

பிளாக் சாமுராய் கலர்.. ஸ்லிம் ரக்டு பிளேடு GT Mobile..1 இல்ல 3 DOOGEE மாடல் ரெடி.. அதிரவிடும் அம்சங்கள்..

டூகி (DOOGEE) நிறுவனம் புதிதாக மூன்று டூகி ரக்டு ஸ்மார்ட்போன் (DOOGEE rugged smartphone) மாடலை CES 2025 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் சந்தையில், கேமிங் ஸ்மார்ட்போன் (gaming smartphone), ஃபிலிப் ஸ்மார்ட்போன் (flip smartphone), போல்டபில் ஸ்மார்ட்போன் (foldable smartphone) என்று மக்கள் இப்போது பலதரப்பட்ட வித்தியாசமான ஸ்மார்ட்போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். டூகி ரக்டு ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணையும் மாடல்களாக Blade GT, S200X, மற்றும் V40 Pro ஆகிய மாடல்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

டூகி பிளேடு ஜிடி (DOOGEE Blade GT), டூகி எஸ்2000எக்ஸ் (DOOGEE S200X) மற்றும் டூகி வி40 ப்ரோ (DOOGEE V40 Pro) ஆகிய மூன்று மாடல்கள் பற்றிய சிறப்பம்சங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. டூகி பிளேடு ஜிடி (DOOGEE Blade GT) சாதனம் 6.7" இன்ச் 120Hz அல்ட்ரா கிளியர் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

பிளாக் சாமுராய் கலர்.. ஸ்லிம் ரக்டு பிளேடு GT Mobile..1 இல்ல 3 DOOGEE

பிளாக் சாமுராய் கலர்.. பிளேடு மாதிரி ஸ்லிம் ரக்டு GT Mobile..

டூகி பிளேடு ஜிடி (DOOGEE Blade GT):

இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளேடு ஜிடி லைட் எல்ஃப் கிள்ப் எஃபக்ட் கொண்ட வடிவமைப்பை இந்த போன் பெறுகிறது. இதற்கு முன்பு கில்ப் எபக்ட் உடன் வெளிவந்த ஸ்மார்ட்போன் என்றால் அது நத்திங் போன் சாதனங்கள் தான். இப்போது டூகி போனிலும் இந்த அம்சம் இனிமேல் கிடைக்கப்போகிறது. டூகி பிளேடு ஜிடி (DOOGEE Blade GT) சாதனம் ஒரு ஸ்லிம் ஆன ரக்டு ஸ்மார்ட்போனாக வருகிறது.

இரண்டாவது மாடலாக வெளிவரும் டூகி எஸ்2000எக்ஸ் (DOOGEE S200X) ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் உறுதியான ரக்டு போனாக வெளிவருகிறது. இது 1.37" இன்ச் அளவு கொண்ட பின்பக்க இரண்டாம் டிஸ்பிளேவுடன் 10,100mAh பேட்டரி திறனுடன் வெளிவரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் உடன் 32GB ரேம் ஆதரவை பெறுகிறது.

டூகி எஸ்2000எக்ஸ் (DOOGEE S200X):

இது 512GB ஸ்டோரேஜ் உடன் மூன்று நிறங்களை பெரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் கோல்டன் கார்டியன் (Golden Guardian), கிரீன் ரேஞ்சர் (Green Ranger) மற்றும் பிளாக் சாமுராய் (Black Samurai) போன்ற நிறங்கள் அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தபடியாக இருக்கும் சாதனம் தான் டூகி V 40 ப்ரோ (DOOGEE V40 Pro) ரக்ட் போனாகும். இந்த போனை பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பாக, இந்த போனின் முந்தைய மாடலான DOOGEE V30 Pro பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். காரணம் இந்த சாதனம் கடந்த 2023 ஆம் ஆண்டின் சிறந்த ரக்டு போன் சாதனமாக உலகளவில் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டூகி V 40 ப்ரோ (DOOGEE V40 Pro):

DOOGEE V40 Pro ஸ்மார்ட்போன் eSIM ஆதரவுடன் 12GB / 16GB ரேம் + 512GB சாதனமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம் 200MP கேமராவை வழங்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களும் விரைவில் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. ரக்டு ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமையப்போகிறது. இதற்கு DOOGEE ஒரு முக்கிய காரணமாக இருக்க போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
DOOGEE Blade GT Slim Rugged Mobile DOOGEE S200X Black Samurai Rugged Phone DOOGEE V40 Pro Rugged Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X